»   »  வந்தார் "ருத்ரமாதேவி"... ஆந்திரத் திரையரங்குகளில் விழாக்கோலம்.. அசரடிக்கும் அனுஷ்கா!

வந்தார் "ருத்ரமாதேவி"... ஆந்திரத் திரையரங்குகளில் விழாக்கோலம்.. அசரடிக்கும் அனுஷ்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருத்ரமாதேவி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது(தமிழைத் தவிர).

பலமுறை தள்ளிப்போன இந்தப்படம் இன்று வெளியாகி இருப்பதால் தெலுங்கு ரசிகர்கள் ஏக உற்சாகத்தில் இருக்கின்றனர். அனுஷ்காவின் திரை வாழ்க்கையில் அருந்ததி படத்திற்கு பின்னர் சொல்லிக்கொள்ளும் படமாக ருத்ரமாதேவி கண்டிப்பாகத் திகழும் என்று கூறுகின்றனர்.


வரலாற்றுப் படமாக வெளிவந்திருக்கும் ருத்ரமாதேவி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


ருத்ரமாதேவி

ருத்ரமாதேவி

ககாதிய வம்சத்தில் ஆண் வாரிசுகள் இல்லாததால் அங்கு இளவரசியாகப் பிறக்கும் ருத்ரமாதேவியை (அனுஷ்கா) ருத்ரமாதேவுடு என்னும் இளவரசர் பிறந்திருப்பதாக அறிவித்து விடுகிறார் ராஜாவான ராஜ கணபதி தேவுடு. எதிரிகள் எல்லாப் பக்கமும் சூழ்ந்திருப்பதால் இளவரசர் பிறந்திருப்பதாக மக்களிடம் பொய் சொல்லி விடுகிறார். ருத்ரமாதேவி இளவரசனாக தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு ராஜ்ஜியத்தை காப்பாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் எதிரி நாட்டினருக்கு ககாதிய வம்சத்தை ஆளுவது இளவரசன் அல்ல அழகான இளவரசிதான் என்னும் உண்மை தெரிய வருகிறது. இந்த சூழ்நிலையில் ருத்ரமாதேவி தனது தோற்றத்தை வெளிப்படுத்தினாரா இல்லை எதிரிகளுடன் போராடுகிறாரா? என்பதுதான் கிளைமாக்ஸ்.


நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள்

அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், நித்யாமேனன், கேத்தரின் தெரசா ஆகியோரின் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் ருத்ரமாதேவி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. 2D மற்றும் 3D முறையில் படத்தை வெளியிட்டிருக்கின்றனர். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலான அனுஷ்காவின் உழைப்பில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.


அனுஷ்கா

அனுஷ்கா

ராணியாக நடிக்க இந்தப் படத்தில் பல்வேறு தியாகங்களை செய்திருக்கிறார் அனுஷ்கா. 3 கிலோ எடையுள்ள நகைகளை அணிந்து நடித்திருக்கிறார் அது மட்டுமின்றி படத்திற்காக வாள் சண்டை, குதிரையேற்றம், கத்திச்சண்டை உள்ளிட்ட பலவற்றையும் கற்றுக்கொண்டு நடித்திருக்கிறார். அனுஷ்காவின் நடிப்பிற்காகவே ருத்ரமாதேவி படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரையரங்குகள் முன்னர் குவிந்து வருகின்றனராம். படத்திற்கான முன்பதிவு பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஈடாக இருப்பதாக கூறுகின்றனர்.


அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

20 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் அல்லு அர்ஜுனின் கோனா கானா ரெட்டி பாத்திரம் மற்றும் அவர் பேசும் வசனங்கள் எல்லாமே அதிரடியாக இருக்கிறதாம். அல்லு அர்ஜுனிற்காகவே இந்தப் படத்தை இன்னொரு முறை பார்க்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். இயக்குநர் குணசேகர் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனை நடிக்க வைத்ததன் நோக்கம் தற்போது நிறைவேறி இருக்கிறது.


இயக்குனரின் உழைப்பு

இயக்குனரின் உழைப்பு

இயக்குநர் குணசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் முழுவதுமே அனுஷ்காவின் ராஜ்ஜியம் தானாம். அல்லு அர்ஜுன் மற்றும் ராணா டகுபதி சிறிய பாத்திரங்களில் மட்டுமே வந்து செல்கின்றனர். ஹாலிவுட் தரத்திற்கு இணையாக படம் இருக்கிறது முக்கியமாக ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், நடனம், ஆடை வடிவமைப்பு எல்லாமே நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

இன்று வெளியாகியிருக்கும் ருத்ரமாதேவி உலகம் முழுவதும் 2450 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ் தவிர்த்து தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகி இருக்கிறது ருத்ரமாதேவி. திரையிட்ட இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு படத்திற்கு கிடைத்திருப்பதாக கூறுகின்றனர். படத்தின் சாட்டிலைட் உரிமைகள் விலைபோகவில்லை எனினும் சுமார் 60 கோடிகளுக்கும் அதிகமாக படத்தின் விநியோக உரிமைகள் விலை போயிருக்கின்றன.


English summary
Gunasekhar's Rudrama Devi finally hit the screens today after a huge round of promotions.actress Anushka Shetty in the title role has received positive reviews from the audiences around the world.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil