Don't Miss!
- News
மாதா, பிதா, குரு, தெய்வம், மனைவிக்கு மரியாதை..கல்லூரி விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உடன் செம டீல் பேசிய அனுஷ்கா சர்மா... எவ்வளவு தெரியுமா ?
மும்பை : பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா, பிரபல ஓடிடி தளங்களான அமேசான் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்களுடன் பெரிய தொகை ஒன்றிற்கு டீல் பேசி முடித்துள்ளார். இதைக் கேட்டு பாலிவுட்டே ஆடிப்போய் உள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், சினிமா துறையே கிட்டதட்ட முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களும் வேறு வழியில்லாமல் ஓடிடி தளங்களை அதிக நாட துவங்கி விட்டனர். இதனால் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் படங்களை விட ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யும் படங்கள் தான் அதிகரித்து வருகின்றன.
சிறிய பட்ஜெட் படங்கள் பலவும் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. ஓடிடியில் ரிலீசாகும் பல படங்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருவதால் தயாரிப்பாளர்கள் பலரின் கவனம் ஓடிடி பக்கம் திரும்பி வருகிறது. சினிமா துறையை சேர்ந்த பலரும் ஓடிடி தளங்களுக்கு எதிராக பேசமி வந்தாலும், மக்களின் ஆதரவு அமோகமாக இருந்து வருகிறது.

டீல் பேசிய அனுஷ்கா சர்மா
இதை சரியாக புரிந்து கொண்ட பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் Clean Slate Filmz, பிரபல ஓடிடி தளங்களான அமேசான் இந்தியா மற்றும் நெட்ஃபிளிக்ஸ் இந்தியா நிறுவனங்களுடன் பெரிய தொகைக்கு டீல் பேசி உள்ளார். அடுத்த 18 மாதங்களுக்கு இந்நிறுவனம் தயாரிக்கும் படங்கள், வெப்சீரிஸ்களை இந்த ஓடிடி தளங்களில் வெளியிட டீல் பேசப்பட்டுள்ளது.

என்னது இவ்வளவு தொகைக்கா
மும்பையில் பாலிவுட்டின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் Clean Slate Filmz, 8 படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை வெளியிட உள்ளது. இதற்காக 54 மில்லியன் டாலருக்கு டீல் பேசி முடித்துள்ளனர். ஆனால் இது பற்றி முழு விபரங்களையும் கூற Clean Slate Filmz வின் இணை நிறுவனரும் அனுஷ்கா சர்மாவின் சகோதரருமான கர்னேஷ் சர்மா மறுத்து விட்டார்.

நெஃபிளிக்சிற்கு எந்தெந்த படங்கள்
ஆனால் இந்நிறுவனத்தின் மூன்று தயாரிப்புக்களை தாங்கள் வெளியிட உள்ளதை நெட்ஃபிளிக்ஸ் உறுதி செய்துள்ளது. தற்போதைய தகவலின் படி, Clean Slate Filmz நிறுவனத்தில் அனுஷ்கா சர்மா நடித்த பயோபிக் படமான Chakda Xpress, Mai த்ரில்லர் வெப்சீரிஸ், Qala படம் ஆகியவற்றை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட உள்ளதாம். இதில் Chakda Xpress பெண்கள் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

அசந்து போன பாலிவுட்
அனுஷ்கா சர்மாவின் இந்த ஸ்மார்ட்டான டீலை கேள்விப்பட்டு பாலிவுட்டே ஆடிப் போய் உள்ளதாம். Clean Slate Filmz நிறுவனத்தின் எந்தெந்த படங்களை அமேசான் வெளியிட உள்ளது என்பது சரியாக தெரியவில்லை. இருந்தாலும் அனுஷ்காவின் தயாரிப்பு நிறுவனம் வெளியிடப் போகும் படங்களின் மீதாவ எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.