»   »  சுல்தான் படத்தை கோஹ்லி க்கு ஸ்பெஷலாக காட்டப்போகும் அனுஷ்கா

சுல்தான் படத்தை கோஹ்லி க்கு ஸ்பெஷலாக காட்டப்போகும் அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மான் கானுடன் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் 'சுல்தான்' திரைப்படத்தை தனது காதலர் விராட் கோஹ்லிக்கு ஸ்பெஷலாக திரையிட்டு காட்ட உள்ளாராம் அவரது காதலி அனுஷ்கா சர்மா.

கோஹ்லி -அனுஷ்கா சர்மா ஜோடியின் ஈருடல் ஓருயிராக இருந்தனர். அவர்களின் காதல் வாழ்வில்,சுல்தான் படத்தினால் பிரச்சினை உருவானது.

சுல்தான் படத்தில் அனுஷ்கா சர்மா பிசியான பின்னர்தான் பிரச்சனையே வெடித்தது.இதன் பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்தனர்.

இணைந்த ஜோடி

இணைந்த ஜோடி

சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் இணைந்த இவர்கள் பொது இடங்களில் ஜோடியாக காணப்பட்டனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை வர காரணமாக இருந்த சுல்தான் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை கோஹ்லிக்காக ஏற்பாடு செய்துள்ளாராம் அனுஷ்கா சர்மா.

மல்யுத்த வீராங்கனை

மல்யுத்த வீராங்கனை

அனுஷ்கா சர்மா இந்த திரைப்படத்தில் பெண் மல்யுத்த வீராங்கனையாக நடிக்கிறார். தனது திரைவாழ்க்கையில் 'சுல்தான்' திரைப்படத்தை முக்கியமாக கருதுகிறார் அனுஷ்கா.

அனுஷ்காவின் ஆர்வம்

அனுஷ்காவின் ஆர்வம்

சுல்தான் படத்தில் தன்னுடைய நடிப்பு எப்படி என்பது குறித்த கோஹ்லியின் கருத்துகளை கேட்க அனுஷ்கா ஆர்வமாக இருப்பதால்தான் இந்த சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிரிக்கெட் டீம்

கிரிக்கெட் டீம்

இந்த சிறப்பு காட்சி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் கோஹ்லியோடு மேலும் சில இந்திய கிரிக்கெட் வீரர்களையும் சிறப்புக் காட்சிக்கு அழைக்க அனுஷ்கா சர்மா திட்டமிட்டுள்ளதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Anushka sharma wants beau Virat Kohli and even his teammates to catch a special screening of the film!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil