Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கணவர் விராத் கோலியை அலேக்காக தூக்கிய அனுஷ்கா ஷர்மா.. ஐபிஎல் கோப்பையை அவர் தூக்குவாரா?
மும்பை: ஆண்கள் தான் பெண்களை எப்போது தூக்கிக் கொண்டு போஸ் கொடுப்பதையும், சுமந்து கொண்டு நடப்பதையும் பார்த்திருப்போம். இந்நிலையில், வழக்கத்துக்கு மாறாக நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கணவரை அலேக்காக தூக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஆர்சிபியின் கேப்டன் விராத் கோலியை நடிகை அனுஷ்கா ஷர்மா பின்னால் இருந்தபடி தூக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
ரூ.6
கோடிக்கு
சொகுசு
கார்
வாங்கிய
பிரபாஸ்...டிரெண்டிங்
ஆகும்
ஃபோட்டோஸ்
ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்க உள்ள நிலையில், விராத் கோலி ரசிகர்களுக்கு இது பெரும் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

அனுஷ்கா ஷர்மா
நடிகர் ஷாருக்கானின் ரப்னே பனாதி ஜோடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அனுஷ்கா ஷர்மா. பாட்டியாலா ஹவுஸ், ஜப் டக் ஹை ஜான், பிகே, என்எச் 10, சுல்தான், சஞ்சு என ஏகப்பட்ட சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். பாதாள் லோக், புல் புல் என ஒடிடியில் வெளியான படைப்புகளையும் தயாரித்துள்ளார்.

கணவர் கோலி
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக பல ஆண்டுகளாக கலக்கி வரும் கிரிக்கெட் வீரர் விராத் கோலியை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அனுஷ்கா சர்மா. சமீபத்தில் இருவருக்கும் அழகிய மகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஃபிட்
அனுஷ்கா ஷர்மா மற்றும் விராத் கோலி தம்பதியினருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி குழந்தை பிறந்த நிலையில், மூன்றே மாதங்களில் மீண்டும் பழையபடி ஃபிட்டாகி உள்ளார் அனுஷ்கா ஷர்மா. அதற்கு எடுத்துக்காட்டாகவே தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ அமைந்துள்ளது.
கோலியை தூக்கிய அனுஷ்கா
நடிகை அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது. கணவர் விராத் கோலியை பின்னால் இருந்து செம பேலன்ஸ் போட்டு அசால்ட்டாக தூக்கி அசத்தி உள்ளார் அனுஷ்கா ஷர்மா. ஏகப்பட்ட பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

நீங்க எதுவும் பண்ணாதீங்க
விராத் கோலியை தூக்கியதை அறிந்த அனுஷ்கா ஷர்மா நிஜமாவே தான் தான் தூக்கினேனா என்கிற சந்தேகம் கொண்டார். பின்னர், கணவர் கோலியை பார்த்து நீங்க எதுவும் ஹெல்ப் பண்ணீங்களா என்று கேட்க, இல்லவே இல்லை என கோலி அந்த வீடியோவில் மறுக்க, மீண்டும் கோலியை தனது பலம் கொண்டே அனுஷ்கா தூக்கி அசத்தி உள்ளார்.

ஐபிஎல் கோப்பையை தூக்குவாரா
சமீபத்தில் இந்தியா வந்த இங்கிலாந்து அணியை கோலி தலைமையின் கீழ் செயல்பட்ட இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என அனைத்து ஃபார்ம்களிலும் தோற்கடித்து ஓடவிட்டது. ஆனால், ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்து வரும் விராத் கோலியால் இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை.

பதிலடி கொடுப்பாரா
அனுஷ்கா உங்களை தூக்கிட்டாங்க, நீங்க ஐபிஎல் கோப்பையை தூக்குவீங்களா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி கலாய்த்து வருகின்றனர். ஹேட்டர்களுக்கு இந்த முறை விராத் கோலி தனது ஸ்டைலில் பதில் சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.