Don't Miss!
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Finance
budget 2023: தொடரும் நம்பிக்கை..சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!
- News
எங்கள் தரப்பில் வேட்பாளர் தயார்.. பாஜக நிலைப்பாட்டுக்கு காத்திருக்கிறோம்..ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கொலை செய்ய சதி.. பாதுகாப்பு கேட்கும்.. நடிகை அனுஷ்காவின் சகோதரர்!
சென்னை : பிரபல நடிகை அனுஷ்காவின் சகோதரருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதை அடுத்து அவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. தெலுங்குத் திரைப்படமான சூப்பர் மூலம் கடந்த 2005 -ஆண்டு சினிமா உலகிற்கு அறிமுகமானார் அனுஷ்கா. இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக தனது அறிமுகத்தை கொடுத்தார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளன.
அனுஷ்கா ஷெட்டி தனது நடிப்புகளில் ஒரு நந்தி விருது , ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் மூன்று பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட எக்கசக்க பார்ட்டுகளை பெற்றுள்ளார். . கிட்டத்தட்ட 47 திரைப்படங்களுக்கு மேல் பலத்திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். மேலும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக அனுஷ்கா ஷெட்டி இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்க போகும் அதிர்ச்சி சம்பவம்...என்ன நடக்க போகுதோ?
இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, அருந்ததி, பஞ்சமுகி, சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இவர் கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருந்த நிசப்தம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. தற்போது, இவருக்கு படவாய்ப்பு இல்லாததால் இவருக்கு மாப்பிள்ளை வேலையில் குடும்பத்தார் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், அனுஷ்கா ஷெட்டி சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி கொலை மிரட்டல் வந்துள்ளதால், அவர் போலீஸ் பாதுகாப்புகேட்டுள்ளார். அனுஷ்கா ஷெட்டி சகோதர், ஜெய கா்நாடகா ஜனபர வேதிகே என்ற அமைப்பின் தலைவரான முத்தப்பா ராயின் நெருங்கிய ஆதரவாளராக இருக்கிறார்.
இவரை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவுக்கு, ஜெய கர்நாடக அமைப்பின் நிர்வாகிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். குணரஞ்சன் ஷெட்டியும் தன்னை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாகவும், கவனமுடன் இருக்கும்படியும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஊடகளில் தெரிவித்திருந்தார்.
முத்தப்பா ராயின் மற்ற ஆதரவாளர்களான மன்வித் ராய், ராகேஷ் மல்லி ஆகியோருக்கும் குணரஞ்சன் ஷெட்டிக்கும் பிரச்சினை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மன்வித், ராகேஷ் இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.