twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீங்கதான் ரியல் ஸ்டார்கள்.. பெண் போலீஸ் அதிகாரிகளை அப்படி பாராட்டிய நடிகை அனுஷ்கா!

    By
    |

    ஐதராபாத்: பெண் போலீஸ் அதிகாரிகளால்தான் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று நடிகை அனுஷ்கா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

    பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி, தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார்.

    'பஹிரா' படபிடிப்பு முடிந்தது.. சம்மரில் ரிலீஸ்! 'பஹிரா' படபிடிப்பு முடிந்தது.. சம்மரில் ரிலீஸ்!

    இப்போது படங்களில் நடிக்காமல் இருக்கும் அவர், அடுத்து தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

    சைபராபாத் கமிஷனர்

    சைபராபாத் கமிஷனர்

    இதற்கிடையே அவர் ஐதராபாத்தில் நடந்த பெண் காவல்துறை அதிகாரிகளுக்கான முதல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனார் தலைமையில் பெண் காவல்துறை அதிகாரிகளுக்கான முதல் மாநாடு நேற்று நடைபெற்றது.

    ரீல் நட்சத்திரம்

    ரீல் நட்சத்திரம்

    இதில் சிறப்பு விருந்தினராக நடிகை அனுஷ்கா, கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, திரையில் எங்களை ஸ்டார்களாக காட்டினாலும் இந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தான் நட்சத்திரம். நாங்கள் ரீல் நட்சத்திரங்கள், நீங்கள் ரியல் நட்சத்திரங்கள்.

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    உங்கள் கடும் முயற்சி மற்றும் உழைப்பால்தான் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம். உங்கள் தியாகங்கள் உயர்வானவை. இந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் மூலம் நான் மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறேன்' என்று குறிப்பிட்டார். பெண் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்களைப் பற்றி பேசுவதற்காக இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.

    பெண் செக்யூரிட்டி

    பெண் செக்யூரிட்டி

    இதில் 750-க்கும் அதிகமான பெண் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஷீபஹி ('SHEpahi') என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அவசர எண் 100 வாகனங்கள் மற்றும் ஷீ பேருந்து வசதியும் துவக்கி வைக்கப்பட்டன. ஐடியில் பணியாற்றும் பெண்களுக்கான இந்த ஷீ பேருந்தை பெண் டிரைவர் இயக்குவார். பெண் செக்யூரிட்டியும் இதில் இருப்பார்கள்.

    Recommended Video

    12 ராணிகள் PHOTOSHOOT | SONIA AGARWAL & SANCHITA SHETTY CHAT | FILMIBEAT TAMIL

    English summary
    Anushka Shetty attended the annual conference of “She Pahi” initiative in Hyderabad and did the honours as the chief guest.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X