TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
மொபைலா பாட்டுல பார்த்தது.. 12 வருஷம் கழிச்சு இப்போதான் நடக்குது..!
சென்னை: நடிகை அனுஷ்கா அடுத்ததாக மாதவனுடன் இணைகிறார்.
சமீபத்தில் அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகமதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ஒர் ஹாரர் த்ரில்லர் திரைப்படத்தில் மாதவனுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைக்கதை ஆசிரியர் கோனா வெங்கட் திரைக்கதை எழுதுவதோடு பீப்புள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சைலண்ட் என டைட்டில் வைத்துள்ளனர்.
இத்திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்குகிறார். மாதவன் அனுஷ்காவோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் வெளிநாட்டு நடிகர் ஒருவரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
யாவரும் நலம் திரைப்படத்திற்கு பிறகு மாதவன் நடிக்கும் ஹாரர் த்ரில்லர் படம் இதுவாகும். மேலும் அனுஷ்காவுடன் 12 வருடங்களுக்கு பிறகு மாதவன் இணைகிறார். 2006 ஆம் ஆண்டு வெளியான ரெண்டு திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
சைலண்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. இந்தியுலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.