»   »  ‘தல 57’... மீண்டும் அஜித் ஜோடியாகிறார் அனுஷ்கா...?

‘தல 57’... மீண்டும் அஜித் ஜோடியாகிறார் அனுஷ்கா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேதாளம் பட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இன்னும் பெயரிடப்படாத இப்படம், ‘தல 57' எனக் குறிப்பிடப்பட்டு வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

அனுஷ்கா...

அனுஷ்கா...

இந்நிலையில், இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த என்னை அறிந்தால் படத்தில் இரண்டு நாயகிகளுள் ஒருவராக அனுஷ்கா நடித்திருந்தார்.

மீண்டும் வாய்ப்பு...

மீண்டும் வாய்ப்பு...

தற்போது பாகுபலி 2, எஸ் 3 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்த சூழ்நிலையில் அஜித்துடன் நடிக்க மீண்டும் கிடைத்த வாய்ப்பை அனுஷ்கா தவறவிட மாட்டார் எனக் கூறப்படுகிறது.

தமன்னா...

தமன்னா...

இதேபோல், அஜித்தின் அடுத்த பட நாயகி தமன்னா தான் என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரத்தில் உள்ளது. ஏற்கனவே, சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் அஜித் ஜோடியாக தமன்னா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசை...

அனிருத் இசை...

தல 57 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கெனவே அஜித் - சிறுத்தை சிவா - அனிருத் கூட்டணியில் வெளிவந்த ‘வேதாளம்' படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Speculations are rife that Siva is keen to rope in Anushka Shetty to play the female lead for his next ‘Thala 57’. The actress has earlier worked with the Veeram actor in ‘Yennai Arindhaal’. However, no official announcement has been made by the makers regarding the leading lady.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil