»   »  ராஜமவுலிக்கும், பிரபாஸுக்கும் வருத்தம்: அதிரடி முடிவு எடுத்த அனுஷ்கா

ராஜமவுலிக்கும், பிரபாஸுக்கும் வருத்தம்: அதிரடி முடிவு எடுத்த அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை குறைத்தே தீருவேன் என்று ஜிம்மில் தவமாய் தவமிருக்கிறாராம் அனுஷ்கா.

ஆர்யாவுடன் சேர்ந்து நடித்த இஞ்சி இடுப்பழகி படத்திற்காக ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமல் திண்டாடுகிறார் அனுஷ்கா. பாகுபலி 2 படத்திற்காக எடையை குறைக்குமாறு இயக்குனர் ராஜமவுலி தெரிவித்தும் அனுஷ்காவால் முடியவில்லை.

அவரும் ஜிம், யோகா என்று எது எதையோ செய்தும் ஒன்றும் நடக்கவில்லை.

ராஜமவுலி

ராஜமவுலி

அனுஷ்காவுக்கு எடை குறையாததை பார்த்த ராஜமவுலி அவரின் போர்ஷன்களில் கிராபிக்ஸை பயன்படுத்தி ஒல்லியாக காண்பித்தார். அப்படி இருந்தும் சில இடங்களில் அனுஷ்கா குண்டாக தெரிந்தார்.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்காவுக்கு பிரபாஸின் சாஹோ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் உடல் எடையால் நடிக்க முடியாமல் போனது. சாஹோ இயக்குனரும் அனுஷ்காவை வெயிட்டை குறைக்கச் சொன்னார்.

சாஹோ

சாஹோ

சாஹோ படத்தில் அனுஷ்காவை தனக்கு ஜோடியாக போடுமாறு இயக்குனர் சுஜீத்திடம் பிரபாஸே தெரிவித்தாராம். ஆனால் எடை பிரச்சனையால் அனுஷ்காவால் நடிக்க முடியவில்லை.

எடை

எடை

தனது பட வாய்ப்புகளுக்கு எடை ஒரு பெரிய தடையாக இருப்பதை புரிந்து கொண்டார் அனுஷ்கா. எப்படியாவது எடையை குறைத்தே தீர வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

ஜிம்

ஜிம்

எடையை குறைக்க அனுஷ்கா தற்போது தினமும் 8 மணிநேரம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கிறாராம். ட்ரெய்னர் ஒருவரை நியமித்து அவர் அறிவுரையுடன் ஒர்க்அவுட் செய்து வருகிறாராம்.

English summary
Anushka is reportedly spending eight hours in gym daily inorder to shed that extra kilos.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X