»   »  'அதை' மட்டும் நான் ஒருபோதும் செய்யவே மாட்டேன்: சொல்கிறார் அனுஷ்கா

'அதை' மட்டும் நான் ஒருபோதும் செய்யவே மாட்டேன்: சொல்கிறார் அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கான்களை வைத்து படம் தயாரிப்பது குறித்து பேசியுள்ளார் அனுஷ்கா சர்மா.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிப்பதுடன் படங்களை தயாரிக்கவும், பாட்டு பாடவும் செய்கிறார். என்ஹெச் 10 படம் மூலம் தயாரிப்பாளர் ஆனார். அதன் பிறகு பில்லௌரி படத்தை தயாரித்து நடித்தார்.


அவர் தயாரித்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் டீசன்டாக வசூல் செய்தது. இந்நிலையில் கான்களின் படங்களை தயாரிப்பது குறித்து அவர் கூறும்போது,


கான்கள்

கான்கள்

கான்களை வைத்து படம் தயாரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. நான் தயாரித்து வரும் கதைகள் சூப்பர் ஸ்டார்களுக்கு பொருத்தமாக இருக்காது.


என்.ஹெச். 10

என்.ஹெச். 10

என்.ஹெச். 10 மற்றும் பில்லௌரி ஆகிய இரண்டு படங்களுக்குமே சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை. எங்களை பொறுத்தவரை அனைத்தும் திரைக்கதையில் இருந்து துவங்குகிறது.


திரைக்கதை

திரைக்கதை

நாளைக்கு எழுதப்படும் திரைக்கதைக்கு பெரிய பட்ஜெட் தேவைப்படலாம். அந்த கதைக்கு கான்கள் அல்லது வேறு ஏதாவது பெரிய நடிகர் தேவை என்றால் நிச்சயம் அவர்களை நடிக்க வைப்போம்.


நடிகர்

நடிகர்

நடிகருக்காக என்னால் கதை எழுத முடியாது. அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். கதைக்காக தான் நடிகர்கள். முதலில் கதையை எழுதிவிட்டு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்வோம். மாற்றி செய்தால் படம் ஓடாது என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.


English summary
Bollywood actress Anushka Sharma said that she is not planning to cast Khans in her production ventures anytime soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos