»   »  தல 57: மீண்டும் இணையும் 'என்னை அறிந்தால்' ஜோடி?

தல 57: மீண்டும் இணையும் 'என்னை அறிந்தால்' ஜோடி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 படத்தில் அஜீத்துடன் இணைந்து அனுஷ்கா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'வேதாளம்' படத்திற்குப் பின் அஜீத்-சிறுத்தை சிவா கூட்டணி மீண்டும் தல 57 படத்தில் இணைகிறது.

Anushka Team Up with Ajith in Thala 57

அஜீத் பிறந்தநாளான மே 1 ல் இப்படத்தின் பூஜை போடப்படும் என்றும், ஜூன் முதல்வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. இந்நிலையில் அனுஷ்கா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே 'என்னை அறிந்தால்' படத்தில் அஜீத்-அனுஷ்கா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் படம் பார்த்தவர்கள் அனுஷ்காவின் கதாபாத்திரத்தை வலுவாக அமைக்கவில்லை என்று கருத்துத் தெரிவித்தனர்.

ஒரு படத்தை தனியாக தோளில் சுமக்கக் கூடிய அனுஷ்காவை 'என்னை அறிந்தால்' படத்தில் வீணடித்து விட்டதாக, அனுஷ்காவின் ரசிகர்களும் குற்றம் சாட்டினர்.

பொதுவாக சிறுத்தை சிவாவின் படங்களில் ஹீரோயினுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது.இந்நிலையில் அஜீத் படத்தில் மீண்டும் அனுஷ்கா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.இந்தப் படத்திலாவது அனுஷ்காவிற்கு முக்கியத்துவம் இருக்குமா? பார்க்கலாம்.

English summary
Sources Said After Yennai Arindhaal Anushka Again Team Up with Ajith for Thala 57.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil