»   »  ஹீரோக்களுக்கே வயிற்றில் புளியைக் கரைத்த அனுஷ்கா... 'பாகமதி' வெற்றிக்கு நன்றி!

ஹீரோக்களுக்கே வயிற்றில் புளியைக் கரைத்த அனுஷ்கா... 'பாகமதி' வெற்றிக்கு நன்றி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அனுஷ்காவுக்காக 5 ஆண்டுகள் காத்திருந்தார் என தெரியுமா?

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'பாகமதி' திரைப்படம் தியேட்டர்களில் நல்ல வசூலைக் குவித்து வருகிறது.

அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்த இந்தப் படம் தீபிகா படுகோனேவின் 'பத்மாவதி' படத்துக்கு போட்டியாக களமிறங்கி வெற்றி கண்டிருக்கிறது.

'பாகமதி' படத்தின் வெற்றிக்காக அனுஷ்கா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா

அனுஷ்கா

தென்னிந்திய திரையுலகில் மட்டுமல்லாது இந்திய திரையுலகிலும் கடந்த சில வருடங்களாக 'பாகுபலி' படத்தின் மூலம் அதிகம் கவனிக்கப்பட்ட ஹீரோயினாக விளங்கியவர் அனுஷ்கா. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் அவருடைய தோற்றமும், அழகும், நடிப்பும் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது.

பாகமதி

பாகமதி

பாகுபலி படங்கள் அவருடைய இமேஜை இன்னும் அதிகமாக உயர்த்தின. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்கா பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் கடந்த நான்கு வருடங்களாக அவருக்காகவே காத்திருந்து 'பாகமதி' படத்தை எடுத்து முடித்து கடந்த வாரம் வெளியிட்டார்கள்.

நன்றி தெரிவித்த அனுஷ்கா

நன்றி தெரிவித்த அனுஷ்கா

தெலுங்கில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வெற்றிக்காக அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார். "பாகமதி படத்தைப் பாராட்டியதற்காக ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார் அனுஷ்கா.

படக்குழுவினருக்கு நன்றி

படக்குழுவினருக்கு நன்றி

"என்னுடைய திரையுலக வாழ்க்கையில் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய ஒரு படமாக இந்தப் படத்தை உருவாக்கி, எனக்காகவே நான்கு வருடங்கள் காத்திருந்த இயக்குனர் அசோக், மற்றும் யுவி குழுவினர் ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள்.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

நீங்கள் நிச்சயம் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே, நாங்கள் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் கடினமாகவே உழைக்கிறோம். என்னுடைய வாழ்க்கையில் நிபந்தனையற்ற அன்பு செலுத்தி வரும் என்னுடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி" என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

ஹீரோக்களின் படங்களே

ஹீரோக்களின் படங்களே

தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களே தோல்வியைத் தழுவி வரும் நிலையில் ஹீரோயின் அனுஷ்காவின் படம் வெற்றி பெற்றுள்ளது திரையுலகினருக்கும் மற்ற ஹீரோக்களின் ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Anushka thanked her fans for the success of the film 'Bhaagamathie'. Leading heroes in Telugu are giving flops nowadays and the heroine Anushka's film has been a success.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil