பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் அனுஷ்கா?
ஹைதராபாத்: நடிகை அனுஷ்கா பிக் பாஸ் 3 வீட்டிற்கு செல்ல உள்ளாராம்.
பிக் பாஸ் 3 தெலுங்கு நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சி துவங்கும் முன்பில் இருந்து சர்ச்சையாக உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி பரபரப்பு புகார் தெரிவித்தார்.

இந்த புகாரை நாகர்ஜுனா கண்டுகொள்ளவில்லை என்று கூறி அவரை பலரும் வசை பாடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை எதிர்த்து விஜயவாடாவில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது.
பிக் பாஸ் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை எதிர்த்து ஸ்வேதா ரெட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். இப்படி பிரச்சனையோ பிரச்சனைகளுக்கு நடுவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் திருநங்கை அரசியல்வாதியான தமன்னா கலந்து கொண்டுள்ளது மட்டும் தான் பாராட்டப்படுகிறது. மற்றபடி நிகழ்ச்சியை கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அத்தகைய நிகழ்ச்சியில் நம்ம அனுஷ்கா கலந்து கொள்கிறாராம். அய்யய்யோ அனுஷ்காவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போய் பெயரை கெடுத்துக் கொள்ளப் போகிறார் என்று பதற வேண்டாம். ஏனென்றால் அவர் போட்டியாளராக செல்லவில்லை மாறாக விருந்தாளியாக போகிறார்.
அனுஷ்கா பிக் பாஸ் வீட்டிற்கு சென்று தங்கப் போவது இல்லை. வார இறுதி நாளில் நாகர்ஜுனாவுடன் சேர்ந்து மேடையில் தோன்றி போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கப் போகிறார். மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை பார்த்து பேசிவிட்டு வெளியே வந்துவிடுவார், அவ்வளவு தான்.
அவர் தற்போது மாதவனுடன் சேர்ந்து சைலன்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் பிக் பாஸ் வீட்டில் தங்க அவருக்கு நேரம் இல்லை. முன்னதாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனை அனுஷ்கா தொகுத்து வழங்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











