»   »  விளையாட முடியாத ஃபீலிங்கில் இருக்கும் கோஹ்லியை பார்க்க வந்த காதலி அனுஷ்கா

விளையாட முடியாத ஃபீலிங்கில் இருக்கும் கோஹ்லியை பார்க்க வந்த காதலி அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: தனது காதலர் விராட் கோஹ்லியை பார்க்க நடிகை அனுஷ்கா சர்மா பெங்களூர் வந்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலர்கள். அனுஷ்காவை விரைவில் திருமணம் செய்து கொள்ள கோஹ்லி விரும்புகிறார்.

அனுஷ்காவுக்கோ தற்போது திருமணம் செய்து கொள்ள ஆர்வம் இல்லை.

கோஹ்லி

கோஹ்லி

ஐபிஎல் சீசன் துவங்கிவிட்டது. தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லி விளையாடவில்லை.

அனுஷ்கா

அனுஷ்கா

காயத்தால் ஓய்வில் இருக்கும் கோஹ்லியை பார்க்க அனுஷ்கா மும்பையில் இருந்து பெங்களூர் வந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

கிரிக்கெட்

கிரிக்கெட்

அனுஷ்கா முன்பு எல்லாம் கோஹ்லி எந்த போட்டியில் ஆடினாலும் பார்க்க வந்துவிடுவார். ஆனால் அவர் பார்க்கும் போட்டிகளில் எல்லாம் கோஹ்லி தோல்வி அடைவதாக ஆளாளுக்கு விமர்சித்தார்கள். அதன் பிறகு கோஹ்லி ஆடும் போட்டிகளை நேரில் பார்ப்பதை அனுஷ்கா தவிர்த்து வருகிறார்.

பெங்களூர் அணி

பெங்களூர் அணி

இந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணி மொத்தம் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரேயொரு போட்டியில் தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Virat Kohli visited by ladylove Anushka Sharma in Bangalore. Royal Challengers Bangalore skipper Virat Kohli is missing the early action in the ongoing Indian Premier League season 10 because of his shoulder injury.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil