ஷேவ் பண்ணாதே: கோஹ்லிக்கு காதலி அனுஷ்கா அன்புக் கட்டளை
மும்பை: தனது காதலர் கோஹ்லியிடம் தாடியை ஷேவ் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா சர்மா.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகிறார்கள். ஆனால் இருவரும் காதலை மட்டும் ஒப்புக் கொள்வது இல்லை.
நேரில் கேட்டால் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சமூக வலைதளங்களில் காதல் மெசேஜ்கள் அனுப்பிக் கொள்கிறார்கள். காயம் அடைந்த கோஹ்லியை பார்க்க அனுஷ்கா பெங்களூர் வந்திருந்தார்.
இந்நிலையில் கோஹ்லி தனது செல்ஃபி ஒன்றை சமூக வலைதளத்தில் போட்டு நான் தாடியை ஷேவ் செய்ய தயாராக இல்லை என்றார்.
இதை பார்த்த அனுஷ்கா தாடியை ஷேவ் செய்யக் கூடாது என்று கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











