»   »  போகிற போக்கில் சினேகனுக்கு புளுகுனி பட்டம் கொடுத்த அனுயா

போகிற போக்கில் சினேகனுக்கு புளுகுனி பட்டம் கொடுத்த அனுயா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அனுயா சினேகனுக்கு புளுகுனி பட்டம் கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் இருந்தனர். அதில் ஸ்ரீ தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார். தப்பித்தோம் பிழைத்தோம் என்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓடிவிட்டார்.

இந்நிலையில் நடிகை அனுயா எலிமினேட் செய்யப்பட்டார்.

அனுயா

அனுயா

பிக் பாஸ் வீட்டில் ஆளாளுக்கு ஏதாவது பேசி சர்ச்சையை கிளப்பினார்கள். ஆனால் அனுயா இருந்த இடமே தெரியாமல் இருந்தார். இந்நிலையில் தான் அவர் வெளியேற்றப்பட்டார்.

பட்டம்

பட்டம்

அனுயாவிடம் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு பட்டம் கொடுக்குமாறு கேட்கப்பட்டது. அதற்கு அவர் தலைவர் சினேகனுக்கு புளுகுனி பட்டமும், பரணிக்கு வெள்ளந்தி பட்டமும் அளித்தார்.

ஜூலியானா

ஜூலியானா

அனுயா பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு பட்டம் அளித்துவிட்டு நடையை கட்டினார். அனுயா அல்லது ஜூலியானா வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டது. ஜூலியை வைத்து தான் பிக் பாஸ் நிகழ்ச்சியையே ஓட்டுகிறார்கள். அதனால் அனுயாவை வெளியேற்றிவிட்டனர்.

பரணி

பரணி

முன்னதாக தலைவர் சினேகன் பரணிக்கு புளுகுனி விருது வழங்கினார். பரணியும் அதை சிரித்தபடியே வாங்கிச் சென்றார். இந்நிலையில் அனுயா சினேகனுக்கு புளுகுனி பட்டம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Anuya has been sent home from the Big boss house. She has given liar title to Snehan befor leaving the big boss house.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil