'நண்பன்' ஷூட்டிங்கில்.. அதற்குப் பிறகுதான் விஜய்யின் கன்னத்தில் அறைந்தேன்.. பிரபல நடிகை விளக்கம்!

By

சென்னை: முதலில் தயங்கிய நான், அதற்குப் பிறகுதான் நடிகர் விஜய்யின் கன்னத்தில் அறைந்தேன் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Recommended Video

Thalapathy Vijay க்கு 20 வயசுல அவ்வளவு Maturity • Vanitha Vijaykumar Exclusive

இந்தியில் ஆமிர்கான், மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர் உட்பட பலர் நடித்த படம், 3 இடியட்ஸ்.

விது வினோத் சோப்ரா தயாரிப்பில், ராஜ்குமார் ஹிரானி இயக்கி இருந்த இந்தப்படம் சூப்பர் ஹிட்டானது.

ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ்

இது தமிழில் விஜய் நடிப்பில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஷங்கர் இயக்கி இருந்தார். ஜீவா, ஶ்ரீகாந்த், சத்யன், சத்யராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இலியானா ஹீரோயினாக நடித்திருந்தார். அவர் சகோதரியாக அனுயா நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

நடிகை அனுயா

நடிகை அனுயா

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த சம்பவம் ஒன்றை நடிகை அனுயா இப்போது தெரிவித்துள்ளார். இவர், ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து ஹரிகுமாரின் மதுரை சம்பவம், சுந்தர்.சியின் நகரம், நஞ்சுபுரம், விஜய் ஆண்டனியின் நான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

முதலில் தயங்கினேன்

முதலில் தயங்கினேன்

அவர் கூறும்போது, 'விஜய்யின் நண்பன் படத்தில், கதைப்படி எனக்கு பிரசவ நேரம். கடுமையான மழை வேறு. சாலைகளில் வெள்ளம். ஆம்புலன்ஸ், வாகனங்கள் கிடைக்காது. இதனால், நடிகர் விஜய் எனக்குப் பிரசவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது விஜய்யை, நான் வேகமாகக் கன்னத்தில் அறைவேன். இந்தக் காட்சியை படமாக்கும்போது, முதலில் தயங்கினேன்.

வேகமாக அறைந்தேன்

வேகமாக அறைந்தேன்

எப்படி தளபதியை அடிப்பது என்று யோசித்தேன். அதனால் நான் மெதுவாக அவர் கன்னத்தில் தட்டினேன். உடனே, இயக்குனர் ஷங்கர் சார், நீங்க நல்ல நடிகை என்று நினைத்தேன் என்றார். பிறகு அவரை எப்படி நான் அறைவது? என்று சொன்னேன். 'இது நடிகர் விஜய் இல்லை, படத்தில் வரும் பாரி வேந்தன் கேரக்டர். அப்படி நினைத்துக்கொண்டு அடியுங்கள்' என்றார் ஷங்கர். பிறகு அவரை வேகமாக அறைந்தேன்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X