Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
தனுஷ் தனது பிறந்தநாளை எங்கு கொண்டாடுகிறார் தெரியுமா?... இதை யாருமே எதிர்பார்க்கலியே
சென்னை : துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தனுஷ், தற்போது வரை 40 க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டார். இவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹாலிவுட் படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச நடிகராகி விட்டார் தனுஷ். ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் தனுஷை பாராட்டி, வாழ்த்துக்கள் சொல்லி வரும் நிலையில் தனுஷ் இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.இந்த சமயத்தில் பிறந்த நாளன்று தனுஷ் எங்கு இருக்கிறார், எங்கு தனது பிறந்தநாளை எப்படி கொண்டாடுகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.ஆனால் தனுஷ் தற்போது சென்னையில் தான் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தனுஷிற்கு நெருக்கமான வட்டாரங்களில் இது பற்றி விசாரித்த போது, பிறந்த நாளுக்கென்று ஸ்பெஷல் பிளான் எதுவும் தனுஷ் தயார் செய்யவில்லை என்றே சொல்லப்படுகிறது. அவர் தற்போது தான் நடித்து, ரிலீசிற்கு தயாராக உள்ள இரண்டு படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18 ம் தேதி ரிலீசாக உள்ளது.கர்ணன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஓராண்டிற்கு பிறகு தற்போது தனுஷ் படம் தியேட்டரில் ரிலீசாக உள்ளது.இதைத் தொடர்ந்து நானே வருவேன் படம் ரிலீசாக உள்ளது. இந்த படங்களின் இறுதிக்கட்ட வேலைகளில் தனுஷ் செம பிஸியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு தனுஷ் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என சொல்லப்படுகிறது.
இருந்தாலும் தனுஷின் ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் சோஷியல் மீடியாவில் தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். #HappybirthdayDhanush என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தி கிரே மேன் படத்தை தொடர்ந்து வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களில் நடிக்க தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது பற்றிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அழகாக
பியானோ
வாசிக்கும்
தனுஷ்...ரசிகர்களுக்கு
ட்ரீட்
கொடுத்த
பிரசன்னா!