»   »  என் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள்: நடிகை பேட்டி

என் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள்: நடிகை பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என் இடத்தில் வேறு யார் இருந்தாலும் இந்நேரம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.

பாபி ஜி கர் பர் ஹை என்ற பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தவர் ஷில்பா ஷிண்டே. அவர் அந்த தொடரை தயாரித்த சஞ்சய் கோஹ்லி என்பவர் மீது மும்பை போலீசில் பாலியல் தொல்லை புகார் கொடுத்தார்.

இந்நிலையில் இது குறித்து ஷில்பா கூறுகையில்,

தற்கொலை

தற்கொலை

நான் ரொம்பப் பட்டுட்டேன். என் இடத்தில் வேறு யார் இருந்தாலும் இந்நேரம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். மக்கள் பலவிதமாக பேசுவார்கள்.

பணம்

பணம்

நான் பணம் அல்லது வேறு எதற்காகவோ பாலியல் புகார் கொடுத்துள்ளதாக மக்கள் நினைக்கிறார்கள். அனைவருக்கும் ஒரே போன்று நடப்பது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

என் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பாலியல் தொல்லை குறித்து பேசுவது சுலபம் அல்ல. பாலியல் தொல்லை குறித்து வாய் திறக்காமல் இருக்கச் சொல்வார்கள். அப்படியும் பேசினால் இத்தனை நாள் ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்பார்கள்.

காத்திருக்காதீர்கள்

காத்திருக்காதீர்கள்

பாலியல் தொல்லை நடந்தால் அமைதியாக இருக்காதீர்கள். துணிந்து பேசுங்கள் என்பதே பெண்களுக்கு நான் அளிக்கும் அறிவுரை. இது குறித்து பேசுவது எளிது அல்ல என்பதால் பெண்கள் தயங்குவது எனக்கு புரிகிறது என்றார் ஷில்பா.

English summary
Actress Shilpa Shinde who gave sexual harassment complaint against TV serial producer Sanjay Kohli said that anyone else in her position would have committed suicide.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil