அட நல்லாருக்கே...பாக்யராஜ் பட டைட்டிலில் நடிக்கும் அபர்னா பாலமுரளி
சென்னை : இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் Badhaai Ho. 2018 ல் ரிலீசான இந்த படத்தில் ஆயுஷ்மா குரானாவிற்கு ஜோடியாக சன்யா மல்கோத்ரா நடித்திருந்தார்.

நடுத்தர வயதுடைய தம்பதியை சுற்றி தான் கதை அமைக்கப்பட்டிருந்தது. வளர்ந்த குழந்தைகள் இருக்கும் போது மீண்டும் கர்ப்பமாகிறார் அந்த பெண். இதனை வளர்ந்த குழந்தைகளும், சமூகமும் எப்படி பார்க்கிறது என்பதை நகைச்சுவையாக சொல்லிய படம்.
முழுக்க முழுக்க நகைச்சுவை, பொழுதுபோக்கு படமான இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பாலிவுட்டில் பாக்ஸ் ஆபீசில் பெரிய அளவில் ஹிட் ஆனது.
இந்த படத்திற்கு பாக்யராஜ் பட டைட்டிலான வீட்ல விசேஷங்க என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அபர்னா பாலமுரளி நடிக்கிறார். ஹீரோவாக ஆர்ஜே பாலாஜி நடிக்கிறார்.
இந்த படத்தை ஆர்ஜே பாலாஜியே இயக்க போகிறாராம். இவர்களுடன் சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை பேவியூஸ் ப்ராஜக்ட்ஸ் பேனரில் போனி கபூர் தயாரிக்கிறார்.
ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











