»   »  விஜய் 60 ல் கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன்- அபர்ணா வினோத்

விஜய் 60 ல் கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன்- அபர்ணா வினோத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60 வது படத்தில் தன்னுடைய வேடம் குறித்து, நடிகை அபர்ணா வினோத் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தெறிக படத்துக்குப் பின் விஜய் தற்போது அழகிய தமிழ்மகன் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் என 2 நடிகைகளை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

Aparna Vinod Talks about Vijay 60

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து 2 வது கட்ட படப்பிடிப்பினை நெல்லை பகுதிகளில் படம்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள நடிகையான அபர்ணா வினோத் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து அபர்ணா '' விஜய் 60 படத்தில் கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்கவுள்ளேன்.

என்னுடைய காதாபாத்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. ஜூன் 3 ம் தேதி விஜய் 60 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

இரட்டை வேடங்களில் விஜய் நடித்து வரும் இப்படத்திற்கு 'எங்கள் வீட்டுப் பிள்ளை' என்று பெயர் சூட்டவிருப்பதாக, கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

English summary
Actress Aparna Vinod Said ''I play a village belle, a vital character in Vijay 60''.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil