சாப்பாட்டுக்கே வழியில்லை...பீஸ்ட்டுக்கு செலவு செய்யும் இலங்கைவாசிகள்...என்ன கொடுமை சார் இது?
சென்னை : இலங்கையில் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், பீஸ்ட் படம் பார்க்க அந்நாட்டு மக்கள் அடித்துக் கொண்டு பணம் செலவு செய்வது பார்ப்பவர்களை ஆச்சரியப்படவும், குழப்பமடையவும் வைத்துள்ளது.
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இரண்டு நாட்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் எந்த படம் அதிக வசூலை குவிக்கும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

பீஸ்ட் ஃபர்ஸ் டேஃபர்ஸ்ட் ஷோ
பீஸ்ட் படம் தமிழகத்தில் மட்டும் 800 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவிற்கான டிக்கெட்கள், டிக்கெட் புக்கிங் துவங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டன. இதற்கு முன் மாஸ்டர் படத்திற்கும் இரண்டு நிமிடங்களில் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவிற்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.

இங்கேயும் ஹவுஸ்ஃபுல்லா
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பீஸ்ட் படத்தை பார்ப்பதற்கு ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் ஷோவிற்கான டிக்கெட்கள் தீர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆகி உள்ளதாம். சாப்பாட்டிற்கே வழியில்லை என மக்கள் திண்டாடுவதாக கூறுகிறார்கள், பீஸ்ட் படத்திற்கு மட்டும் செலவு செய்ய இவர்களுக்கு எப்படி பணம் வந்தது என பலரும் கேட்டு வருகிறார்கள்.

பணம் எங்கிருந்து வருது
எங்கு பார்த்தாலும் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிடுகிறார். அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூட மக்கள் பல மணி நேரம் காத்து கிடக்கிறார்கள். அடுத்த வாரம் முதல் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு என இந்தியா போன்ற நாடுகளிடம் இலங்கை உதவி கேட்டு வருவதாக செய்திகளில் கூறப்படுகிறது. அதே இலங்கையில் பீஸ்ட் படத்திற்கு வாரி இறைக்க மக்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது.
Recommended Video

என்ன கொடுமை சார் இது
பீஸ்ட் படம் பல படங்களின் காப்பி, படத்தில் கதையே இல்லை என ரிலீசிற்கு முன்பே பலவிதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. குவைத்தில் வன்முறையை தூண்டும் காட்சி இருப்பதாக சொல்லி பீஸ்ட் ரிலீசிற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது. அப்படி இருந்தும் இந்தியாவை விட இலங்கையில் பீஸ்ட் படத்தை பார்க்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். சாப்பாட்டை விடவா பீஸ்ட் முக்கியம். என்ன கொடுமை சார் இது என பலர் நொந்து கொண்டிருக்கிறார்கள். நம்ம ஊரில் தான் சினிமா பைத்தியங்கள், வெறியர்கள் இருக்கிறார்கள் என்றால், இலங்கைகாரர்கள் நம்ம ஆளுங்களையே மிஞ்சி விட்டார்களே.


Click it and Unblock the Notifications











