»   »  அப்துல் கலாம் மறைவுக்கு தவறான பெயரில் இரங்கல்... ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகிய அனுஷ்கா

அப்துல் கலாம் மறைவுக்கு தவறான பெயரில் இரங்கல்... ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகிய அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகையும் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் காதலியுமாகிய நடிகை அனுஷ்கா சர்மா, இந்தியர்களின் கடும்கோபத்திற்கு தற்போது ஆளாகி உள்ளார். இந்திய நாடு ஈன்றெடுத்த தவப்புதல்வர் திரு அப்துல்கலாம் அவர்கள் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

நாடே அதிர்ச்சியில் மூழ்கிய இந்தத் தருணத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு துக்கத்தை அனுசரித்து வருகிறது, மேலும் இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த மக்களுமே அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்து வருகின்றனர்.

APJ Abdulkalam RIP - Anushka Sharma Use Wrong Name on Twitter

சமூக வலைதளங்களில் மக்கள் அனைவரும் இந்த துக்கச்செய்தியை பகிர்ந்து அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கின்றனர். இப்படி ஒட்டுமொத்த நாடும் துக்கத்தில் மூழ்கி இருக்கும் இந்தத் தருணத்தில் நடிகை அனுஷ்கா சர்மா, அப்துல்கலாமிற்கு இரங்கல் தெரிவித்து போட்ட ஒரு ட்வீட் ரசிகர்களைக் கோபத்தில் தள்ளியிருக்கிறது.

படிக்காத பாமர மக்கள் கூட அந்த மகானின் பெயரை சரியாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர், ஆனால் அனுஷ்கா சர்மாவிற்கு அவரின் பெயர் தெரியவில்லை போலும்.

அப்துல்கலாம் என்பதற்குப் பதிலாக அப்துல்கலாம் ஆசாத் எனப் பெயரை தவறுதலாக ட்வீட்டில், பதிவிட கோபத்தில் பொங்கிய ரசிகர்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி செய்யலாமா?

என்று கேள்விக்கணைகளை வீசி திட்டித் தீர்த்து விட்டனர், இதனால் பயந்துபோன அனுஷ்கா சர்மா சற்று நேரத்தில் தான் போட்ட ட்வீட்டை நீக்கி விட்டு புதிய ட்வீட்டை பதிவிட்டார்.

அனுஷ்கா புதிதாகப் பதிவிட்ட ட்வீட்

இருந்தாலும் கூட அந்தத் தவறான ட்வீட்டை மன்னிக்காத ரசிகர்கள் தற்போது யூ டியூபில் அதனைப் பதிவேற்றி உலவவிட்டுள்ளனர்.

English summary
APJ Abdulkalam RIP - Hindi Actress Anushka Sharma Insulting Abdulkalam She Tweets Wrong Name on Twitter Page, Now Her Fans Got Angry on Anushka Sharma.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil