»   »  பெண்கள் என்றாலே அவர் படுக்கைக்கு செல்ல வேண்டும்: பிரபல இயக்குனர் மீது நடிகை குற்றச்சாட்டு

பெண்கள் என்றாலே அவர் படுக்கைக்கு செல்ல வேண்டும்: பிரபல இயக்குனர் மீது நடிகை குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil
சுசி லீக்ஸ் ரொம்ப பழசு, ஸ்ரீ லீக்ஸ் தான் புதுசு!- வீடியோ

ஹைதராபாத்: நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ள பாலியல் புகார் குறித்து பிரபல இயக்குனர் சேகர் கம்முலா விளக்கம் அளித்துள்ளார்.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகில் தற்போது அதிகமாக உள்ளதாக நடிகை ஸ்ரீ ரெட்டி என்பவர் தெரிவித்துள்ளார்.

அப்படி படுக்கைக்கு அழைப்பவர்களின் பெயர்களை வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இயக்குனர்

இயக்குனர்

பெண்கள் என்றால் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர் அந்த இயக்குனர். அவர் இரக்கமில்லாதவர். கொம்முலு வச்சின சேகருடு என்பதில் இருந்து அவரின் பெயரை கண்டுபிடிக்கலாம் என ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். இதை பார்த்த அனைவரும் அவர் பிரபல இயக்குனர் சேகர் கம்முலாவை பற்றி தான் பேசுகிறார் என்றனர்.

கோபம்

ஸ்ரீரெட்டி அவ்வாறு தெரிவித்த பிறகு சேகர் கம்முலா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் சரி இதில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் சரி இது தவறு, கிரிமினல் வேலை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

வேலை

பெண்களுக்கு சமஉரிமை மற்றும் அவர்களின் மேம்பாட்டிற்கு நான் முக்கியத்துவம் கொடுப்பது என்னுடன் பணியாற்றும் மற்றும் என்னை தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். என்னை கை காட்டுபவர்களை சும்மா விட மாட்டேன் என்கிறார் சேகர் கம்முலா.

மன்னிப்பு

மன்னிப்பு கேளுங்கள், என்னை பற்றிய போஸ்டை நீக்குங்கள் இல்லை என்றால் சட்ட நடவடிக்கையை சந்திக்க தயாராக இருங்கள் என்று எச்சரித்துள்ளார் சேகர்.

English summary
Popular director Shekhar Kammula tweeted that, 'Whatever might be their intentions and whoever might be involved in this diabolic act , I would like to say that it is WRONG, IMMORAL and CRIMINAL'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X