twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அபூர்வராகம் டூ ஜெயிலர் வரை...அனைவரும் கொண்டாடும் ரஜினி.. பிறந்தநாள் ஸ்பெஷல்!

    |

    சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும், நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ரஜினிகாந்த் என்ற பெயரை கேட்டதுமே நமக்கு நினைவுக்கு வருவது அவருடைய ஸ்டைல் தான். அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களின் மனதில் ரஜினி இரண்டுற கலந்து விட்டார்.

    டிசம்பர் 12ந் தேதி வந்தாலே போதும் ரஜினியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அதேபோல இன்றும் ரஜினி ரசிகர்கள் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

    ரீ ரிலீஸான பாபா வசூலில் கெத்துக்காட்டியதா? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?ரீ ரிலீஸான பாபா வசூலில் கெத்துக்காட்டியதா? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்

    சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்

    தென் இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி படங்கள் மட்டும் இல்லாமல் ஹாலிவுட் படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமையும் நம்ம சூப்பர் ஸ்டாரைத் தான் சேரும். ஜாக்கிசானுக்கு அடுத்து ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் ரஜினிகாந்த் இருக்கிறார்.

    டிசம்பர் 12ல் பிறந்தார்

    டிசம்பர் 12ல் பிறந்தார்

    1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் நாள் கர்நாடகாவில் ராமோஜி ராவுக்கும், ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தவர் தான் சிவாஜி ராவ் கெயிட்வாட். இவர் ஐந்து வயதாக இருக்கும் போதே தனது தாயை பறிகொடுத்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். விவேகானந்தா பாட சாலையில் படித்த ரஜினிக்கு படிப்பை விட நடிப்பின் மீது தான் ஆர்வம் அதிகமாக இருந்தது.

    தொலைந்த 150 ரூபாய்

    தொலைந்த 150 ரூபாய்

    பெங்களூரில் பேருந்து நடத்துனரா இருந்த ரஜினி, நிறைய மேடை நாடகங்களையும் நடித்திருக்கிறார். அப்போது நண்பர் ஒருவர் கொடுத்த உத்வேகத்துடன் வெறும் 150 ரூபாயுடன் சென்னை பயணத்தை தொடங்கினார். அப்போது அவர் வைத்திருந்த 150 ரூபாயும் தொலைந்து போக நிலைகுலைந்து போய் நின்ற ரஜினிக்கு பக்கத்தில் இருந்தவர் உதவி செய்தார். அந்த பயணி மட்டும் இல்லை என்றால, நான் சென்னைக்கு வந்திருக்க முடியாது என்று தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார் ரஜினி.

    அன்று பற்ற வைத்த நெருப்பு

    அன்று பற்ற வைத்த நெருப்பு

    இதையடுத்து, 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வராகம் படத்தில் ரஜினிகாந்த் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். காற்றில் பறக்கும் முடி, தொளதொள பேண்ட் சட்டையுடன், கதவை திறந்து கொண்டு, சிகரெட்டை ஸ்டைலாக அவர் பற்ற வைத்த தீ இன்று வரை அவரை சூப்பர் ஸ்டாராகவே வைத்துள்ளது.

    ஏராளமான படங்களில்

    ஏராளமான படங்களில்

    அதன் பிறகு, மூன்று முடிச்சு படத்தில் பெண் ஆசை கொண்ட ஒரு வில்லனை அடித்து சிறந்த வில்லன் என பெயர் எடுத்தார். அதனைத் தொடர்ந்து 16 வயதினிலே, காயத்ரி, புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை போன்ற படங்கள் அவரை மாசான ஸ்டைல் ஹீரோவாக ஆக்கியது.

    மாபெரும் சக்தியானார்

    மாபெரும் சக்தியானார்

    ரஜினிகாந்த் நடித்த ரொம்ப வித்தியாசமான திரைப்படம் தான் ராகவேந்திரா. ரஜினியின் நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா அவரை பக்தி சார்ந்த ஒரு மனிதராக அடையாளம் காட்டியது. இதையடுத்து, அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா போன்ற திரைப்படங்கள் பல நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனையும் படைத்தது. இந்த காலகட்டத்தில் தான் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மாபெரும் சக்தியாக காணப்பட்டார்.

    ஜெயிலர்

    ஜெயிலர்

    வருடத்திற்கு பல படங்களில் நடித்து வந்த ரஜினி கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    73வது பிறந்த நாள்

    73வது பிறந்த நாள்

    இந்நிலையில் ரஜினிகாந்தின் 73வதுபிறந்த நாளை முன்னிட்டு, சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் காமென் டிபியை வெளியிட்டுளள்னர். இந்த டிபி இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த காமென் டிபியில் ரஜினிகாந்த் பாபா படத்தின் கெட்டப்பில், பாபா முத்திரையை காட்டியபடி நிற்கிறார்.

    பர்த்டே ஸ்பெஷல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்

    பர்த்டே ஸ்பெஷல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்

    மேலும்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 9ந் தேதி முதல் 15ந் தேதி வரை சென்னை, கோயம்பத்தூரில் தேர்வு செய்யப்பட்ட சில திரையரங்குகளில் 'சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்‌ பர்த்டே ஸ்பெஷல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்' என்ற பெயரில் ஏழு நாட்களுக்கு பாபா , , சிவாஜி: தி பாஸ், ரோபோ 2.0, தர்பார் போன்ற படங்கள் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டு வருகிறது.

    English summary
    Apoorvaragam to Jailer...superstar Rajinikanth celebrates 73rd birthday, Superstar Rajnikanth Birthday Special story
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X