»   »  'அப்பா' தந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்... ரசிகர்கள் பாராட்டு மழை!

'அப்பா' தந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்... ரசிகர்கள் பாராட்டு மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமுத்திரக்கனி, நமோ நாராயணன், தம்பி ராமையா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் 'அப்பா'.

சமூக அக்கறையுடன் படமெடுக்கக் கூடிய இயக்குநர் என்பதும், பிரபலங்களின் நெகிழ்ச்சியான விமர்சனங்களும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தன.


வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் இன்று வெளியாகியிருக்கும் 'அப்பா' ஒவ்வொருவருக்கும் தங்கள் தந்தையை நினைவுபடுத்தியதா? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? பார்க்கலாம்.


தந்தைகளுக்கு

'சமுத்திரக்கனி எல்லா தந்தைகளுக்கும் ஒரு அழுத்தமான செய்தியை இப்படத்தின் மூலமாக கொடுத்திருக்கிறார்' என ஹரிஷங்கர் பாராட்டியிருக்கிறார்.


திரைக்கதை

'முதல் பாதி முடிந்து 2 வது பாதிக்காக காத்திருக்கிறேன். திரைக்கதை, நடிகர்களின் தேர்வு இரண்டுமே அருமை' என்று வினோத் புகழ்ந்திருக்கிறார்.


வின்னர்

'அப்பா கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் நிறைய படங்களில் நடித்து இதுபோல நல்ல படங்களைத் தயாரிக்க வேண்டும்' என ஜெய சூர்யா என்னும் ரசிகர் சமுத்திரக்கனியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.


மறக்க முடியாத

'அப்பா உண்மையிலேயே மறக்க சில முடியாத தருணங்களை கொடுக்கும். சமுத்திரக்கனி உங்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்' என நடிகர் ரோபோ சங்கர் பாராட்டியிருக்கிறார்.


இதுபோல ரசிகர்கள் பலரும் இப்படத்தை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். மொத்தத்தில் அப்பா - தந்தைகளுக்கான பாடம்.English summary
Samuthirakani, Tambi Ramaiah Starrer Appa Released Today- Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil