»   »  அப்பா நலம்... டுவிட்டரில் நன்றி சொன்ன கமல் மகள்கள்

அப்பா நலம்... டுவிட்டரில் நன்றி சொன்ன கமல் மகள்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பா நலமுடன் உள்ளதாக நடிகர் கமலின் மகள்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்றும் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என்றும் சுருதி மற்றும் அக்ஷரா ஆகியோர் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் ழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் மாடிப்படியில் இருந்து கீழே தவறி விழுந்ததில் அவரது கால் எலும்பு முறிந்தது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Appa should recover very very soon says Kamalhassan daughters

சபாஷ் நாயுடு படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அண்மையில்தான் அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பினார். ஹைதராபாத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

லண்டனில் நடைபெறவுள்ள இந்திய திரைத் திருவிழாவில் கமல்ஹாசன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டத்தால் அவர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

கமல் நலமுடன் உள்ளதாக அவரது அண்ணன் சந்திரஹாசன் கூறியுள்ள நிலையில், அப்பா நலமுடன் உள்ளதாகவும், நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என்று அவரது மகள்கள் சுருதி மற்றும் அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளனர்.

English summary
Appa should recover very very soon. He's doing better says Kamal's daughters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil