twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடியின் கொடுமையைச் சொல்லும் 'அப்பா..வேணாம்ப்பா'

    By Shankar
    |

    ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்து படித்து சமுதாயத்தில் மிக கெளரவமான வேலைக்கு செல்லும் ஒருவன் குடி நோயால் தன் வாழ்க்கையில் மானம், மரியாதை, வீடு, மனைவி எல்லாவற்றையும் இழக்கிறான்.

    அதன்பின் மருத்துவ சிகிச்சை மூலம் குடிநோயிலிருந்து விடுபடும் அவன், இனி வாழ்க்கையில் மதுவையே தொடக்கூடாது என்ற உறுதியுடன் மனம் திருந்தி வரும்போது, அவன் மீது நம்பிக்கையில்லாமல் மனைவி வெளியேறுகிறாள்.

    அவன் மீண்டும் குடிக்குத் திரும்புகிறானா.. அல்லது மனைவியைச் சமாதானப்படுத்தி நல்ல வாழ்க்கை வாழ்கிறானா.. இதுதான் அப்பா வேணாம்ப்பா படத்தின் கதை.

    பொதுவாக சமுதாயத்தில் பல பேர் குடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் குடி நோயாளிகள் அல்ல. தன் நிலை தெரிந்தும் குடியை விட முடியாமல் குடித்து குடித்தே துன்பப்படும் மனிதர்களே குடி நோயாளிகள். அப்படிப்பட்ட மனிதனின் கதை தான் 'அப்பா..வேணாம்ப்பா..'

    ஆல்கஹாலிக் அனானிமஸ்

    ஆல்கஹாலிக் அனானிமஸ்

    இது வரை தமிழ் திரைப்பட வரலாற்றில் குடி நோய் பற்றிய திரைப்படம் இத்தனை விரிவாக எடுக்கப்படவில்லை என்னும் அளவுக்கு விரிவாக எடுத்திருக்கிறார்கள்.

    ஆல்கஹாலிக் அனானிமஸ் என்னும் அமைப்பினால் பல லட்சம் பேர் குடியிலிருந்து திருந்தி வாழ்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது இந்தப் படம்.

    இயக்குநர்

    இயக்குநர்

    படத்தின் இயக்குனர் வெங்கட்டரமணன் பல தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியவர். பல ஆவணப்படங்களை இயக்கி அவை சென்னை பொதிகையில் வெளிவந்திருக்கின்றன. இவர் இயக்குனர் வேலு பிரபாகரனின் உதவியாக திரைப்படங்களிலும் தொலைக்காட்சித்தொடரிலும் பணியாற்றியவர். தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் பணியாற்றியவர். 53 வயதிலும் ஒரு சமுதாய சிந்தனை உள்ள கதையை தேர்ந்தெடுத்து கதாநாயகனாக நடித்து இயக்கி, தயாரித்துள்ளார்.

    மிகக் குறைந்த பட்ஜெட்

    மிகக் குறைந்த பட்ஜெட்

    ஏறக்குறைய முற்றிலும் புதுமுக நடிக நடிகைகளைக் கொண்டு உருவான இப்படம் இந்த கால கட்டத்திற்கு மிகவும் ஏற்ற படமாகும். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் உருவான மிகக் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களின் வரிசையில் இதுவும் அடங்கும்.

    உதவிகள்

    உதவிகள்

    டிடிகே மருத்துவமனையில் மருத்துவராக பணி புரியும் டாக்டர்.சிவசுப்ரமணியன் மருத்துவராகவும் மற்றும் கவுன்சிலராக சங்கரும் நடித்திருக்கிறார்கள். இம்மருத்துவமனையின் இயக்குனர் சாந்தி ரங்கநாதன் இத்திரைப்படத்தின் மீது தனி அக்கறை கொண்டு உதவி இருக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.

    வேல்முருகன் ஒளிப்பதிவு செய்ய, விகே கண்ணன் இசையமைக்கிறார்.

    உண்மை சம்பவங்கள்

    உண்மை சம்பவங்கள்

    இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்துமே குடி நோயாளிகளின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களே..அவர்கள் பல பேரை சந்தித்து அவர்கள் குடியால் இழந்தவற்றையும் திருந்தி பல பேர் வாழ்வதையும் கேட்டு தெரிந்து கொண்டு உருவான திரைப்படம்.

    English summary
    Appa Venaampa is a movie based on Drinking disease made by debutant Venkatraman.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X