»   »  அப்பாடக்கரு ஜெயம் ரவி... த்ரிஷா, அஞ்சலியின்

அப்பாடக்கரு ஜெயம் ரவி... த்ரிஷா, அஞ்சலியின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இவரு என்ன பெரிய அப்பாடக்கரா என்று சந்தானம் கேட்பார். அதையே புதிய படம் ஒன்றிர்க்கு தலைப்பாக வைத்துள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அப்பாடக்கரு'. சுராஜ் இயக்கி வரும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துவிட்டது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. முக்கியமான காட்சியை இங்கு சுராஜ் படமாக்கி வருகிறார்.

கமெடிக்கு விவேக்

கமெடிக்கு விவேக்

இந்தப் படத்தில் காமெடி ஏரியாவை நிரப்ப விவேக்கை ஒப்பந்தம் செய்துள்ளனர். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில தினங்களாக பொள்ளாச்சியில் படமாகின்றன.

எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமிக்குப் பிறகு விவேக், ஜெயம் ரவி இணைந்து பணியாற்றுவது அப்பாடக்கரில்தான் என்பது முக்கியமானது.

காதலிக்க த்ரிஷா அஞ்சலி

காதலிக்க த்ரிஷா அஞ்சலி

அப்பாடக்கரு படத்தில் ஜெயம்ரவிவை த்ரிஷாவும், அஞ்சலியும் காதலிக்கின்றனர். இதில் எந்த காதலியை ஜெயம் ரவி கைபிடிக்கிறார் என்பது சஸ்பென்ஸ்.

வெளிநாட்டில் பாடல்கள்

வெளிநாட்டில் பாடல்கள்

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் அப்பாடக்கரின் டாக்கி போர்ஷன் அடுத்த மாதம் முதல் வாரத்தோடு முடிவுக்கு வருகிறது.

படத்தின் பாடல் காட்சிகளை எடுக்க வெளிநாட்டுக்கு பயணிக்க உள்ளனர்.

ஆக்சன், காதல், காமெடி

ஆக்சன், காதல், காமெடி

ஆக்ஷன் கலந்த காதல் படமாக அப்பாடக்கர் தயாராகி வருகிறது.

இந்த படம் குடும்பத்தினர் அனைவரையும் கவரும் படமாகவும், காமெடி சரவெடியாகவும் இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

2015 ஜெயம் ரவி ஆண்டு

2015 ஜெயம் ரவி ஆண்டு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பூலோகம்' படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ‘ரோமியோ ஜூலியட்' படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த வருடத்தில் இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Appatakkar is an Upcoming Tamil Movie. Directed by Suraj and Produced by Lakshmi Movie Makers. Music by S Thaman. Jayam Ravi, Trisha and Anjali in lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil