»   »  தூக்குச் சட்டி... அப்புக்குட்டி பாராட்டிய குறும்படம்!

தூக்குச் சட்டி... அப்புக்குட்டி பாராட்டிய குறும்படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை கடற்கரையில் தூக்கு சட்டியில் சுண்டல் விற்கும் சிறுவனின் வாழ்க்கையை பற்றிய 'தூக்கு சட்டி' குறும்படம் நடிகர் அப்புக்குட்டியை ரொம்பவே கவர்ந்துவிட்டது.

ஏவிஎம் ஸ்டுடியோ தியேட்டரில் நடந்த இந்தப் படத்தின் வெளியீட்டு விழாவில் சினிமா நடிகர்கள், கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மணிசாமி இயக்கத்தில் , கார்த்திக் அஸ்வின் ஒளிப்பதிவில் இந்தப்படத்தை தயாரித்திருப்பவர் ஜான் மில்டன். படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே பாராட்டினர்.

Appukkutty praises short film

இந்த படம் திரையிடலுக்கு பிறகு மேடையில் பேசிய நடிகர் அப்புக்குட்டி, "இந்தப் படத்தில் நடித்த சிறுவர்கள் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள் . மனித உணர்வுகளை மிக அழகாக இந்த இளைஞர்கள் இந்த சின்ன படத்திற்குள் காண்பித்திருக்கிறார். அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது .

Appukkutty praises short film

இன்றைக்கு சினிமா முழுக்க முழுக்க வியாபாரம் சம்பந்தப்பட்ட ஒரு தொழிலாகத்தான் அனைவரும் பார்க்கிறரர்கள். ஆனால் ஒரு கலாச்சாரத்தை , பண்பாட்டை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது இந்த சினிமாதான் என்பதை மறந்து விடக்கூடாது. பணம், பணம் என்று அலைகின்ற இந்த மனித வாழ்வின் உணர்வுப் பகுதிகளை நமக்கு ஞாபகப்படுத்துவது இந்த சினிமாதான்.

Appukkutty praises short film

சினிமா பல பேருக்கு தொழில், சிலருக்கு உணர்வு, சிலருக்கு கனவு , சிலருக்கு கொண்டாட்டம், சிலருக்கு பொழுதுபோக்கு.... இப்படி ஒவ்வொருவரும் சினிமாவை நமக்குள் வைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். உணர்வைச் சொல்லுகிறோம் என்கிற பெயரில் படம் பார்க்க வருபவர்களை சிலர் அழவைப்பதும் இங்குதான் . கவலையை மறந்து சந்தோசமாக இருக்கவே சினிமா பார்க்க வருகிறார்கள் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது நம் கடமை. நமது கலாச்சாரம் பண்பாடு , குடும்ப ஒற்றுமை, பாசம் எல்லாம் இன்றைக்கு சினிமா படங்களில் மட்டுமே நிலைத்திருக்கிறது . இது தொடர வேண்டும் கலைகள் மூலமாக மக்களுக்கு பல விஷயங்களை சொல்லலாம். தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்போம் நமது பண்பாட்டை காப்போம்," என்று பேசினார் .

நிறைவாக தயாரிப்பாளர் ஜான் மில்டன் , இயக்குநர் மணிசாமி நன்றி தெரிவித்தனர்.

Read more about: appukkutty, short film
English summary
Actor Appukkutty has praised a shortfilm Thookku Satti after watched in an event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil