»   »  அப்புகுட்டியை உற்சாகப்படுத்திய 'வாங்க வாங்க'

அப்புகுட்டியை உற்சாகப்படுத்திய 'வாங்க வாங்க'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாங்க வாங்க திரைப்படமும், அதில் தான் ஏற்று நடிக்கும் வேடமும் தனக்கு உற்சாகத்தை அளித்திருப்பதாக நடிகர் அப்புக்குட்டி தெரிவித்திருக்கிறார்.

புதுமுகங்கள் விக்கி, ஹனிபா நாயகர்களாக நடிக்க அவர்களுக்கு ஜோடியாக மது சந்தா மற்றும் ஸ்ரேயா ஸ்ரீ நடித்து வரும் படம் வாங்க வாங்க.

Appukutty is excited about Vaanga Vaanga

என்.பி.இஸ்மாயில் இயக்கி வரும் இப்படத்தில் புதுமுகங்களுடன் இணைந்து அப்புக்குட்டி, பவர் ஸ்டார் சீனிவாசன், சுப்புராஜன் மற்றும் கராத்தே ராஜா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படம் குறித்து அப்புக்குட்டி கூறும்போது "வாங்க வாங்க சமுதாயத்திற்கு தேவையான ஒரு திரைப்படம் தான் இன்றைய காலத்தில் நெட் மற்றும் வாட்ஸ் ஆப் இல்லாமல் நாம் இருப்பது கிடையாது.

இதனால் ஏற்படும் நல்லது, கெட்டதுகளை எடுத்துக் கூறும் படமாக வாங்க வாங்க படத்தை இயக்குநர் எடுத்திருக்கிறார். படத்தில் நானும் ஒரு இயக்குனராக நடிக்கிறேன்.

இந்தப் படம் கண்டிப்பாக பேசப்படும் ஒரு படமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

படத்தின் இயக்குநர் என்.பி.இஸ்மாயில் வாங்க வாங்க பற்றிக் கூறும்போது "இது எனது 3 வது படம் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. இன்றைய கால கட்டத்திற்கு ஏற்றவாறு பேஸ்புக், , காமெடி மற்றும் பேய் எல்லாவற்றையும் கலந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம்

வாங்க வாங்க என்று ஏன் தலைப்பு வைத்திருக்கிறேன் என்றால் ரசிகர்களாகிய உங்கள் அனைவரையும் திரையரங்கிற்கு வாங்க வாங்க என்று வரவேற்கும் நோக்கத்தில் தான்

உங்களை வீட்டிற்கே வந்து நான் வாங்க வாங்க என்று கூப்பிட்டது போல இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன்.

Appukutty is excited about Vaanga Vaanga

கண்டிப்பாக நீங்கள் அனைவரும் திரையரங்கிற்கு வந்து பார்க்க வேண்டும், படத்தை நீங்கள் பயப்படாமல் பார்க்கலாம். நீங்கள் கொடுக்கும் காசிற்கு படம் நல்லதொரு பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும்.

ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்து வெற்றிப் படமாக மற்ற வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

English summary
Vaanga Vaanga is an Upcoming Tamil Film, Appukutty and Power Star Srinivasan in Lead roles. Appukutty says in Recent Interview "I am excited this Movie".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil