Bigg Boss 9 - பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ட் ஆனது யார் தெரியுமா?.. இதோ முழு விவரம்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தொடங்கி ஜோராக நடந்துவருகிறது. வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் தினமும் ஒரு கன்ட்டென்ட்டை கொடுத்துவருகிறார்கள். நந்தினி தானாகவே வீட்டிலிருந்து வெளியேற; இயக்குநர் பிரவீன் காந்தி கடந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. போன சீசன் போன்றே இந்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கடந்த சீசன் போல் இல்லாமல் இந்த முறை ஒட்டுமொத்தமாக வேறு மாதிரி வந்திருக்கிறார் அவர். இதன் காரணமாக முதல் நாளிலிருந்தே அவர் போட்டியாளர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தில் மாறுதல் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்கள்: பொதுவாக இந்த நிகழ்ச்சிக்கு சினிமா பிரபலங்கள்தான் அதிகப்படியாக வருவார்கள். கடந்த சீசனில் அது ஓரளவு குறைந்தது. இந்த முறையோ ஒட்டுமொத்தமாகவே குறைந்துவிட்டது. பிரவீன் காந்தி மட்டும்தான் இந்த சீசனில் சினிமாவில் அறியப்பட்ட முகம் மற்றவர்கள் அனைவருமே சோசியல் மீடியாவில் அறியப்பட்டவர்கள். இதனால் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இருக்குமா என்ற கேள்விகள் எழுந்திருந்தன.

Apsara was evicted this week in the Bigg Boss 9 Here are Full Details
Photo Credit:

தினமும் கன்ட்டென்ட்தான்: ஆனால் அந்த கேள்விகளை எல்லாம் போட்டியாளர்கள் முதல் நாளிலேயே அடித்து நொறுக்கிவிட்டார்கள். தினமும் சண்டை, சச்சரவு, ரொமான்ஸ் என சுவாரஸ்யமாக நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் - கானா வினோத், விஜே பார்வதி - சபரி ஆகியோரை ரசிகர்கள் தவறாமல் ஃபாலோ செய்துவருகிறார்கள். அவர்களது செயல்பாடுகள் விமர்சனத்தை சந்தித்தாலும், அவர்களை வைத்து மீம்ஸ்களும் பறந்துவருகின்றன.

வெளியேறிய போட்டியாளர்கள்: நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே நந்தினி தனது சுய விருப்பத்தின் பேரில் வீட்டிலிருந்து வெளியேறினார். அதனையடுத்து இயக்குநர் பிரவீன் காந்தி எவிக்ட் செய்யப்பட்டார். இரண்டு பேர் வெளியேறியதை தொடர்ந்து 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருந்தார்கள். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் 9லிருந்து எவிக்ட் செய்யப்பட்டிருப்பவர் யார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அப்சரா எவிக்ட்: இந்த வாரம் எஃப்ஜே, அப்சரா, கெமி, அரோரா, விஜே பாரு, ரம்யா ஜோ, திவாகர், சபரிநாதன், கம்ருதின் ஆகியோர் நாமினேஷனில் இருந்தார்கள். இந்நிலையில் இந்த ஒன்பத் பேரில் அப்சராதான் இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அப்சரா எவிக்ட் ஆனதை விஜய் சேதுபதி அறிவிப்பார் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X