»   »  இப்போதும் சொல்கிறேன்... தேசிய விருதுகளில் நேர்மையில்லை! - ஏ ஆர் முருகதாஸ்

இப்போதும் சொல்கிறேன்... தேசிய விருதுகளில் நேர்மையில்லை! - ஏ ஆர் முருகதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் நேர்மை இல்லை.. பெரும் பாரபட்சம் இருந்தது என்ற என் கருத்தில் மாற்றம் இல்லை என்று இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் கூறியுள்ளார்.

2016-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முக்கிய விருதுகள் அனைத்தும் இந்திப் படங்களுக்கே வழங்கப்பட்டன. இந்த விருது வழங்குவதில் அரசியல் இருப்பதாக பலரும் குற்றம் சாட்டினர்.

AR Murugadass again slams National Award selection

இதுகுறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் தனது அதிருப்தியை தெரிவித்தார். தேசிய விருதுகளுக்கான நபர்கள் ஒருதலைபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதனால் சினிமா உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தேர்வு குழுவில் இருந்த பிரியதர்ஷன் விளக்கம் கூறியிருந்தார்.

மீண்டும் குற்றச்சாட்டு

இந்நிலையில், தேசிய விருதுகள் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் தன் கருத்தைக் கூறியுள்ளார்.

"தேசிய விருதுகள் குறித்து நான் கூறியது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கருத்து. வீணாக விவாதம் செய்வதை விட்டுவிட்டு உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள்," என்று நெத்தியடியாகக் கூறியுள்ளார்.

English summary
Director AR Murugadass once again alleged that the National Award selection is a polarised one.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil