»   »  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி? பரபரக்கும் மீடியா!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி? பரபரக்கும் மீடியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி, அவரது புதுப் படம், அரசியல் பிரவேசம்... இந்த மூன்றும் மீடியாவின் எவர் கிரீன் தலைப்புகள். அவை உண்மையோ வதந்தியோ.. ரசிகர்களின் ஆர்வத்தை பல நூறு மடங்கு எகிற வைக்கும் செய்திகள்.

அந்த வரிசையில் இப்போது ஒரு புதிய செய்தி அல்லது வதந்தி. ரஜினியின் அடுத்த படம் குறித்துதான் இது.

கே எஸ் ரவிக்குமார், பி வாசு மற்றும் ஷங்கர் வரிசையில் இப்போது இணைந்திருப்பவர் ஏ ஆர் முருகதாஸ்.

கஜினிக்கு முன்பே...

கஜினிக்கு முன்பே...

கஜினி படத்துக்கு முன்பே ரஜினி படத்தை இயக்குவார் என்று பேசப்பட்டவர் முருகதாஸ். அப்போது அவர் ரஜினியைச் சந்தித்து சொன்ன கதைதான் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ஸ்டாலின் என்ற பெயரில் வெளியாகி ஹிட்டடித்தது.

ரஜினி சொன்னது

ரஜினி சொன்னது

அன்று தனக்கு முருகதாஸ் சொன்ன அந்தக் கதையை சிரஞ்சீவிக்குப் பரிந்துரைத்ததோடு, முருகதாஸையே இயக்குநராக வைத்துக் கொள்ளுமாறு சொன்னவரும் ரஜினிதான். அதன் பிறகு ஒரு நாள் பென்ஸ் பார்க்கில் மீடியாவைச் சந்தித்த முருகதாஸ், "ஒரு விஷயம் ரஜினி சார் என்னிடம் சொன்னார்... இன்னும் ஐந்தாறு படங்களில் நான் நடிக்கக் கூடும். அவற்றில் ஒன்றில் நாம் இணையலாம்" என்றார்.

ஆஸ்கார் பிலிம்ஸ்

ஆஸ்கார் பிலிம்ஸ்

இப்போது அதற்கான நேரம் வந்திருப்பதாக முருகதாஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ரஜினியின் புதிய படத்தைத் தயாரிக்கப் போகிறவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்றும், இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார் என்றும் தகவல்கள் சிறகடிக்கின்றன.

ரஜினி தந்த பரிசு

ரஜினி தந்த பரிசு

ஐ படத்தை விநியோகித்த விதத்தைப் பார்த்து, இந்தப் படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ரவிச்சந்திரனுக்கு ரஜினி வழங்கினார் என்கிறார்கள். ஆஸ்கர் ரவிச்சந்திரன் மிக நீண்ட ஆண்டுகளாக ரஜினியின் கால்ஷீட்டுக்குக் காத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடி ரிலீஸ்

நேரடி ரிலீஸ்

இந்தப் படத்தை நேரடியாக ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனமே தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்பதுதான் ரஜினி போட்ட முதல் நிபந்தனை என்கிறார்கள்.

English summary
According to reports, AR Murugadass is going to direct Superstar Rajinikanth's next movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil