»   »  ரஜினிக்காக ஒரு கதை ரெடி!- ஏ ஆர் முருகதாஸ்

ரஜினிக்காக ஒரு கதை ரெடி!- ஏ ஆர் முருகதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு ரஜினி ரசிகனாக அவரை இயக்க வேண்டும் என்ற ஆசை பல ஆண்டுகளாக உள்ளது. அவருக்காக ஒரு கதையும் வைத்துள்ளேன் என்று இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் கூறினார்.

தமிழ் சினிமாவில் நம்பிக்கையான இயக்குநர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ். தமிழில் மட்டுமல்ல, இந்தியிலும் மிகவும் தேடப்படும் இயக்குநர். தெலுங்கில் தனது இரண்டாவது நேரடி படத்தை இயக்கியுள்ளார். அது மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர்.

கனவு

கனவு

முருகதாஸின் நீண்ட நாள் கனவு ரஜினிகாந்தை இயக்குவது. இதை அவரும் பல ஆண்டுகளாக மீடியாவில் கூறிவருகிறார். ஆனால் அதற்கு சரியான வாய்ப்பு அவருக்கு அமையவில்லை.

ரஜினி கேட்ட கதை

ரஜினி கேட்ட கதை

ஒரு முறை ரஜினியைச் சந்தித்து ஒரு கதையை முருகதாஸ் கூற, அந்தக் கதை பிடித்திருந்தாலும் அவர் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் சிரஞ்சீவிக்கு பரிந்துரைத்தார். அந்தப் படம்தான் பெரும் வெற்றிப் பெற்ற ஸ்டாலின்.

மீண்டும்

மீண்டும்

இப்போது மீண்டும் ரஜினியை இயக்கும் தன் ஆசையை வெளியிட்டுள்ளார் முருகதாஸ். அவர் கூறுகையில், "நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். அவருக்காக கதை உருவாக்குவது எனக்கு கஷ்டமான விஷயம் இல்லை.

கதை ரெடி

கதை ரெடி

ஒரு மாதத்துக்குள் அவருக்கேற்ற ஒரு கதையை என்னால் உருவாக்க முடியும். ஏற்கெனவே ஒரு கதையும் வைத்துள்ளேன். அவர் சரி என்றால் போதும். ரஜினியுடன் இணைந்து படம் பண்ணும் ஆசை நிறைவேறும் என நம்புகிறேன்," என்றார்.

சாத்தியமா?

சாத்தியமா?

ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கும் சூழலில், முருகதாஸுக்கு படம் பண்ணுவாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

English summary
Director AR Murugadass is expressed his wish to direct Rajinikanth in future

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil