»   »  சுரேஷ் காமாட்சியின் மிக மிக அவசரம்... ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஏஆர் முருகதாஸ்!

சுரேஷ் காமாட்சியின் மிக மிக அவசரம்... ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஏஆர் முருகதாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் நல்ல விஷயங்களுக்கு முதல் குரல் கொடுப்பவர் என்றால் அவர் சுரேஷ் காமாட்சியாகத்தான் இருக்கும்.

நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார் என அனைத்து அணியினரும் எதிர்ப்பார்த்த வேட்பாளர் இவர். விஷால் அன்ட் கோ ஒரு அணியாக முழு வெற்றியைப் பெற்றதால், இவர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

AR Murugadass to release the first look of Miga Miga Avasaram

'சரி.. எங்கே போகிறது... அடுத்த முறை பார்த்துக்கலாம்' என ஸ்போர்டிவாக, தன் பட வேலைகளில் பிஸியாகியுள்ளார்.

சுரேஷ் காமாட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல... இயக்குநரும்கூட. முதல் முறையாக ஒரு இயக்குநராக மிக மிக அவசரம் படத்தில் களமிறங்கியுள்ளார்.

இந்தப் படம் பெண் போலீசார் களத்தில் படும் கஷ்டங்களை மிக மிக நுணுக்கமாகச் சொல்லும் படம். படத்தின் டீசர் பார்த்தவர்கள், வியந்து போய், 'சார் உங்களிடமிருந்து இப்படியொரு உணர்வுப் பூர்மான படத்தை எதிர்ப்பார்க்கவில்லை' என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த டீசர் மற்றும் ட்ரைலர் வெளியிடும் முன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வரும் ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடுகிறார் சுரேஷ் காமாட்சி.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, சுரேஷ் காமாட்சியை ஒரு இயக்குநராக முறைப்படி அறிமுகப்படுத்துகிறார் பிரபல இயக்குநர் முருகதாஸ்.

"எனது இயக்கத்தில் வரும் முதல் படம் மிக மிக அவசரம். அதன் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வெளியிடுவதில் மிகப் பெருமை அடைகிறேன்," என்கிறார் சுரேஷ் காமாட்சி.

இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு இது.

English summary
AR Murugadass is going to release the first look of Suresh Kamatchi's Mig Miga Avasaram movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil