கஜினி செகண்ட் பார்ட் எடுக்க ப்ளான் போடும் ஏஆர் முருகதாஸ்… சூர்யாவின் ரியாக்ஷன் இதுதான்!

சென்னை: சூர்யா நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான 'கஜினி' திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

சூர்யாவின் கேரியரில் அவருக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்த கஜினி, இந்தியில் அமீர் கான் நடிப்பில் ரீமேக்கானது.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறக்க முடியாத சஞ்சய் ராமசாமி

மறக்க முடியாத சஞ்சய் ராமசாமி

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்று கஜினி. 2005ல் வெளியான இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். சூர்யாவுடன் அசின், நயன்தாரா ஆகியோர் நடித்த கஜினி படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் கம்போஸ் செய்திருந்தார். சஞ்சய் ராமசாமி என்ற மிகப் பெரிய தொழிலதிபர் கேரக்டரில் சூர்யா நடிக்க, அவரது காதலியாக அசின் நடித்திருந்தார். சூர்யா, அசின் காதல் காட்சிகள் ரசிகர்களிடம் செம்ம ட்ரெண்ட் செட்டாக அமைந்தது. அதேபோல், பாடல்களும் பட்டையைக் கிளப்பின.

பாலிவுட்டில் ரீமேக்கான கஜினி

பாலிவுட்டில் ரீமேக்கான கஜினி

சூர்யாவின் வெரைட்டியான ஆக்டிங் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அசினுடன் ரொமான்ஸ் ஒருபக்கம், சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகள் மறுபக்கம் என மரண மாஸ் காட்டினார். தமிழில் அசுரத்தனமான ஹிட் அடித்த இந்தப் படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் இந்தியில் ரீமேக் செய்தார். அங்கேயும் ஏஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாலிவுட்டில் முதல் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த படம் என்ற லிஸ்ட்டில் கஜினி உள்ளது.

இரண்டாம் பாகம் வருமா?

இரண்டாம் பாகம் வருமா?

இந்நிலையில் தர்பார் படத்திற்கு பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறி வருகிறார் முருகதாஸ். விஜய்யுடன் அவர் இணையவிருந்த திரைப்படமும் கடைசி நேரத்தில் டிராப் ஆனது. ஏஆர் முருகதாஸ் விட்ட வாய்ப்பு தான் நெல்சனுக்கு கிடைக்க, அது பீஸ்ட் படமாக வெளியானது. இப்போது தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏஆர் முருகதாஸ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது சம்மந்தமாக அவர் சூர்யாவிடம் பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கஜினி 2 அல்லது துப்பாக்கி 2

கஜினி 2 அல்லது துப்பாக்கி 2

கஜினி 2 படத்தில் நடிக்க சூர்யாவும் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் கஜினி படத்தின் தயாரிப்பாளர் தரப்போடு சூர்யா ஏஆர். முருகதாஸ் இருவருக்குமே பிரச்சினை இருப்பதால், இது எந்தளவுக்கு சாத்தியப்படும் என தெரியவில்லை. இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் விஜய்யை ஏஆர் முருகதாஸ் சந்தித்து துப்பாக்கி செகண்ட் பார்ட் குறித்து பேசியதாக தகவல் வெளியானது. மேலும், இந்தப் படத்தில் மகேஷ் பாபு வில்லனாக நடிக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனிடையே இப்போது கஜினி படத்தின் இரண்டாம் பாகமும் லிஸ்ட்டில் இணைந்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X