»   »  ஏஆர் முருகதாசுடன் கை கோர்க்கும் மகேஷ் பாபு - சந்தோஷ் சிவன் - ஹாரிஸ் ஜெயராஜ்!

ஏஆர் முருகதாசுடன் கை கோர்க்கும் மகேஷ் பாபு - சந்தோஷ் சிவன் - ஹாரிஸ் ஜெயராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கத்தி படத்துக்குப் பிறகு இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து அகிரா படம் எடுத்து வரும் ஏ ஆர் முருகதாஸ், படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் பிஸியாக இருக்கிறார்.

அவரது அடுத்த படம் தமிழ் - தெலுங்கில் உருவாகவிருக்கிறது.

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பவர் மகேஷ் பாபு. முருகதாஸ் மூலம் அவர் நேரடியாக தமிழ்ப் படத்தில் நடிக்கவிருக்கிறார். ஏற்கெனவே அவர் நடித்த ஸ்ரீமந்துடு படம் செல்வந்தன் என்ற பெயரில் தமிழில் வெளியாகி வரவேற்பு பெற்றது.

சந்தோஷ் சிவன்

சந்தோஷ் சிவன்

இத்தகவலை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஏ.ஆர். முருகதாஸ், மகேஷ் பாபுவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என்று அவர் தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ்

இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி போன்ற படங்களுக்கு ஹாரிஸ்தான் இசையமைத்தார்.

பிப்ரவரியில் அகிரா

பிப்ரவரியில் அகிரா

அகிரா இந்திப் படத்தை வரும் பிப்ரவரி மாதம் உலகெங்கும் வெளியாகவிருக்கிறது.

தயாரிப்பாளராக...

தயாரிப்பாளராக...

அதேநேரம், ஒரு தயாரிப்பாளராக அவர் தமிழில் இரு படங்களையும் இந்தியில் கத்தி ரீமேக்கையும் தயாரிக்கிறார்.

English summary
AR Murugadoss is going to join hands with Mahesh Babu - Harris Jayaraj after his Hindi flick Akira.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil