சிம்புவுடன் மாஸ் கூட்டணி… ஏஆர் முருகதாஸின் சூப்பர் ஹீரோ கான்செப்ட்… தமிழில் இப்படி ஒரு படமா?

சென்னை: விஜய்யின் படத்தை இயக்கவிருந்த ஏஆர் முருகதாஸ் திடீரென அதில் இருந்து விலகினார்.

விஜய் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்த படம் தான் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட்டாக மாறியது.

அதன்பின்னர் படங்கள் இயக்காமல் இருந்த ஏஆர் முருகதாஸ், அடுத்து ஒரு சூப்பர் ப்ளானுடன் கம்பேக் கொடுக்க ரெடியாகிவிட்டார்.

விஜய் படத்தை கைவிட்ட ஏஆர் முருகதாஸ்

விஜய் படத்தை கைவிட்ட ஏஆர் முருகதாஸ்

அஜித்தின் தீனா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏஆர் முருகதாஸ், அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி என ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த ஏஆர் முருகதாஸ், ஸ்பைடர், சர்கார், தர்பார் படங்களின் தோல்வியால் தடுமாறினார். இறுதியாக விஜய்யின் 65வது படத்தை இயக்க கமிட்டாகி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருந்த இந்தப் படம் தொடங்கும் முன்பே ட்ராப் ஆனது. பின்னர் ஏஆர் முருகதாஸுக்கு பதிலாக விஜய்யுடன் நெல்சன் இணைய, அதுவே பீஸ்ட் படமாக உருவானது.

விரைவில் கம்பேக் கொடுக்க முடிவு

விரைவில் கம்பேக் கொடுக்க முடிவு

அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுக்கு கதை சொன்ன ஏஆர் முருகதாஸுக்கு படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால் அமைதியாக இருந்த அவர், தற்போது தரமான கதை ஒன்றை முடித்துவிட்டாராம். Phantom எனும் VFX கம்பெனியின் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை அனிமேஷன் தொழில்நுட்பத்தில் இயக்க முடிவு செய்துள்ளாராம் ஏ.ஆர். முருகதாஸ். கதை, திரைக்கதை, ப்ரீ-புரடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

முதன்முறையாக இணையும் கூட்டணி

முதன்முறையாக இணையும் கூட்டணி

அஜித், விஜயகாந்த், சூர்யா, விஜய், ரஜினி, தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, இந்தியில் அமீர்கான் என டாப் ஹீரோக்களுடன் இணைந்துள்ளார் ஏஆர் முருகதாஸ். இந்நிலையில், முதன்முதலாக சிம்புவுடன் கூட்டணி வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். மேலும், விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஹீரோ படமா?

சூப்பர் ஹீரோ படமா?

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் அனிமேஷனில் உருவாகவுள்ளது உறுதியாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் சூப்பர் ஹீரோ கான்செப்ட்டில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு' படங்கள் மூலம் கம்பேக் கொடுத்துள்ள சிம்பு, அடுத்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார். சிம்புவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளதால், அவரை சூப்பர் ஹீரோவாக்கி அழகுப் பார்க்க ஏஆர் முருகதாஸ் முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X