»   »  முருகதாஸுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம்!

முருகதாஸுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலிவுட்டில் ஆமீர் கான், சல்மான் கானை வைத்து படம் இயக்கப் போவதாக ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக விஜய்யை வைத்து படம் எடுக்கிறார். மீண்டும் பாலிவுட்டில் படம் எடுக்கும் திட்டமும் அவரிடம் உள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது,

சூப்பர்ஸ்டார்கள்

சூப்பர்ஸ்டார்கள்

சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுப்பது எளிது அல்ல. சூர்யா, ஆீர் கான், மகேஷ் பாபு, விஜய் ஆகியோரின் ரசிகர்களை திருப்திபடுத்தும்படி நான் படம் எடுக்க வேண்டும். அதே சமயம் என் முத்திரையும் படத்தில் இருக்க வேண்டும்.

ஆமீர்

ஆமீர்

நானும், ஆமீர் கானும் ஒரே ஸ்டுடியோவில் ஷூட்டிங்கில் இருந்தோம். அப்போது நான் அவரை சந்தித்து பேசினேன். மீண்டும் சேர்ந்து படம் பண்ணுவது என்று முடிவு செய்துள்ளோம்.

படம்

படம்

எனக்கும் ஆமீர் கானுக்கும் ஏற்றபடி ஸ்கிரிப்ட் எழுதி முடித்தவுடன் படத்தை துவங்குவோம். சல்மான் கானை இயக்கவும் திட்டம் உள்ளது. ஆனால் அது ஸ்பைடர் ரீமேக் அல்ல.

சல்மான் கான்

சல்மான் கான்

ஆந்திராவில் சல்மானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதனால் மகேஷ் பாபு நடித்த படத்தில் சல்மானை நடிக்க வைக்க முடியாது. அவருக்கு புதிதாக ஒரு படம் எடுப்பேன்.

பாகுபலி

பாகுபலி

அகிரா படத்தை இயக்கினேனே தவிர எழுதவில்லை. அடுத்தவர்களின் ஸ்கிரிப்ட்டை இயக்குவது எனக்கு வசதியாக இல்லை. பாகுபலி போன்ற பீரியட் டிராமா படம் எனக்கு ஒத்து வராது என்றார் முருகதாஸ்.

English summary
AR Murugadoss who is going to direct Vijay again has plans to direct Bollywood superstars Aamir Khan and Salman Khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil