»   »  ஒவ்வொரு படத்தை முடித்த பிறகும் அஜீத்திடம் போவேன்: முருகதாஸ்

ஒவ்வொரு படத்தை முடித்த பிறகும் அஜீத்திடம் போவேன்: முருகதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு படத்தை முடித்த பிறகும் தான் அஜீத்தை சந்தித்து புதிய படத்தில் நடிக்க கேட்டு வருவதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

பாலிவுட், கோலிவுட் கொண்டாடும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். அவர் இயக்குனர் மட்டும் அல்ல தயாரிப்பாளரும் கூட. அவருக்கு முதல் படம் கொடுத்த ஹீரோ அஜீத். ஆம், தீனா படம் தான் முருகதாஸின் முதல் படம்.

இந்நிலையில் அஜீத் பற்றி முருகதாஸ் கூறுகையில்,

அஜீத்

அஜீத்

நான் ஒவ்வொரு படத்தை இயக்கி முடித்ததும் அஜீத்தை சந்தித்து புதிய படத்திற்கான கதை பற்றி பேசுவேன். ஆனால் இருவரும் மீண்டும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.

பிசி

பிசி

அஜீத் சார் அவர் படங்களில், நான் என் படங்களில் தொடர்ந்து பிசியாக இருப்பதால் இருவரும்
மீண்டும் ஒன்று சேர்ந்து வேலை பார்க்க முடியாமல் உள்ளது.

கதை தயார்

கதை தயார்

அஜீத்துக்காக கதை தயாராக உள்ளது. அவர் மட்டும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டால் என் பிற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அவரை வைத்து படம் எடுக்க தயார் என்றார் முருகதாஸ்.

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார்.

English summary
Director AR Murugadoss told that he goes to Ajith after completing every movie to see whether he can work again with Thala.
Please Wait while comments are loading...