»   »  இன்னும் எனக்கு 50 வயசு கூட ஆகலீங்க!- இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்

இன்னும் எனக்கு 50 வயசு கூட ஆகலீங்க!- இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழரின் பெருமையை உலக அரங்கில் கம்பீரமாக அரங்கேற்றிய கலைஞர்களில் ஒருவரான ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள்.

உலகின் மிக பிஸியான இசைக் கலைஞனான அவருக்கு உலகமே இன்று வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

ரோஜாவில் தொடங்கிய அவர் இசைப் பயணம், இன்று மொழிகள், நாடுகள் என்ற எல்லைகள் தாண்டி உலகெங்கும் வியாபித்து நிற்கிறது.

தமிழர் பெருமை

தமிழர் பெருமை

எண்ணிக்கைக்காக, பணத்துக்காக என்ற நிலை தாண்டி இன்று மனதுக்குப் பிடித்த படங்களாகப் பார்த்துப் பார்த்து செய்துகொண்டிருக்கும் இந்த ஆஸ்கர் நாயகன், உலகின் எந்த மூலைக்குப் போனாலும், எத்தனை சிகரங்கள் தாண்டினாலும் தாய்த் தமிழையும், தமிழ் உறவுகளையும் மறந்ததே இல்லை.

அதிக தமிழ்ப் படங்கள்

அதிக தமிழ்ப் படங்கள்

இந்த ஆண்டு அவர் ஹாலிவுட், ஈரானிய, பிரேசிலிய படங்களுக்கெல்லாம் இசையமைத்தாலும், தமிழ் சினிமாவை மட்டும் மறக்கவில்லை. ரஜினி நடிக்கும் எந்திரன் உள்பட நான்கு புதிய தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கிறார். சொல்லப் போனால், இந்த 2016-ம் ஆண்டு அவர் இசையில் அதிக தமிழ்ப் படங்கள் வெளியாகவிருக்கின்றன.

வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவி

வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவி

சமீபத்திய மழை வெள்ளத்தில் ரஹ்மானின் சென்னை ஸ்டுடியோ பெருமளவு பாதிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், அவர் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவுவதில் தன் நேரத்தைச் செலவழித்தார். தானே நேரில் நின்று உதவிகளை வழங்கியதை திரையுலகம் வியப்போடு சொல்லிக் கொண்டிருக்கிறது.

இசை நிகழ்ச்சி

இசை நிகழ்ச்சி

அதைவிட முக்கியம்... இந்த வெள்ளம் பாதிக்க மக்களுக்காக... வெள்ளத்தால் சிதைந்த சென்னையை மீண்டும் நிமிர்ந்து எழ வைக்க, நெஞ்சே எழு என்ற பெயரில் சென்னை, மதுரை, கோவையில் இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார் ரஹ்மான்.

நன்றி

நன்றி

இந்தப் பிறந்த நாளில் தனக்கு குவிந்த வாழ்த்துகளுக்கு நன்றி கூறியுள்ள ரஹ்மான், "இந்த நாளில் எனக்கு வாழ்த்துச் சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. என்னை இன்னும் கடினமாக உழைத்து நல்ல இசை உருவாக்க வைப்பதே இந்த வாழ்த்துகள்தான்.

English summary
Today Musical Genius A R Rahman is celebrating his 48 th birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil