Don't Miss!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- News
அசத்தலாக மாறப்போகும் 'வாட்ஸ்-அப்'.. வருகிறது 5 புதிய அப்டேட்கள்.. அடடே! என்னென்ன வசதிகள்!
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு சலாம் போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..லால் சலாம் பட வேலைகள் தொடங்கின!
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் லால் சலாம் படத்திற்கு இசையமைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா, தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்திக் பிரியா ஆனந்த் நடிப்பில் வை ராஜா வை படத்தை இயக்கினார்.
தறபோது தனுஷூடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் ஐஸ்வர்யா, திரைப்படங்களை இயக்குவதில் தனது கவனம் செலுத்தி உள்ளார்.
சம்பளம்
அதிகம்
கேட்ட
அனிருத்...
தட்டி
உட்கார
வைத்த
லைகா...
சீனில்
வந்த
ஏஆர்
ரஹ்மான்…

ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் அடுத்து எந்த இயக்குனர் படங்களில் நடிப்பார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

170வது படம்
ரஜினிகாந்த் தன்னுடைய 170 ஆவது படத்தை, டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இளம் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்திலும், வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூப்பர் ஸ்டாருடன் காமெடி வேடத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லால் சலாம் டைட்டில்
தற்போது ரஜினிகாந்தின், மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளனார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.இப்படத்திற்கு 'லால் சலாம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஏஆர் ஹ்மான் இசையில்
இந்நிலையில் லால் சலாம் படத்துக்கான இசை பணிகளை ஏஆர் ஹ்மான் தொடங்கியுள்ளார். அதுதொடர்பான வீடியோவை ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் ரஹ்மானின் இசையை கேட்ட ஐஸ்வர்யா அவருக்கு சலாம் செய்கிறார். இந்த வீடியோ இணையத்தில் டிராண்டாகி வருகிறது. லால் சலாம் திரைப்படம் வரும் 2023ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இத்திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கான பூஜை கடந்த 5ஆம் தேதி போடப்பட்டதை அடுத்து, படத்தின் அடுத்தடுத்து வேலைகளில் ஐஸ்வர்யா ஈடுபட்டு வருகிறார்.