»   »  மருமகன் ஜி.பி.பிரகாஷ் இசையில் விஜய்க்கு பாடும் மாமா ஏ.ஆர்.ரகுமான்

மருமகன் ஜி.பி.பிரகாஷ் இசையில் விஜய்க்கு பாடும் மாமா ஏ.ஆர்.ரகுமான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அட்லி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் விஜய் 59 படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்பாடலைப் பாடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைவா' படத்தை தொடர்ந்து விஜய் படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இது இவரின் 50வது படமாகும். எனவே இசையில் பட்டையை கிளப்பவேண்டும் என்ற முடிவோடு சிரத்தையெடுத்து இசையமைத்து வருகிறாராம் ஜி.வி.பிரகாஷ்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ளது. படம் தொடங்கும் முன்பே பாடல்களை பதிவு செய்ய ஆரம்பித்து விட்டார் ஜி.வி.பிரகாஷ்.

பாடிய தேவா

பாடிய தேவா

இந்தப்படத்திற்காக தேனிசை தென்றல் தேவா ஒரு பாடலை பாட அதை பதிவு செய்தார் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில் அறிமுகப் பாடலை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானை பாட வைக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஜி.வி.பிரகாஷ் விருப்பத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அழகிய தமிழ் மகன்

அழகிய தமிழ் மகன்

‘எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே'... என்று அழகிய தமிழ் மகன் படத்தல் அசத்தலாக அறிமுகப்பாடலை விஜய்க்காக பாடினார் ஏ.ஆர்.ரகுமான்.தற்போது 24 என்ற சூர்யா படத்திற்கு மட்டும் தான் தமிழில் இசையமைத்து வருகின்றார்.

மருமகனுக்காக பாடல்

மருமகனுக்காக பாடல்

ஏ.ஆர்.ரகுமான் தனது சகோதரி மகன் ஜி.வி.பிரகாஷிற்காக விஜய் படத்தில் பாட இருக்கிறார். இது ஜி.வி.பிரகாஷின் 50வது படம் என்பதால் மேலும் பல பிரபலங்கள் இதில் இணையலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் – சமந்தா – எமிஜாக்சன்

விஜய் – சமந்தா – எமிஜாக்சன்

விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கும் இப்படத்தில், சமந்தா, எமிஜாக்ஸன், ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்யின் குழந்தையாக நடிகை மீனாவின் மகள் நைனிகா அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை 1ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

English summary
Ilayathalapathy Vijay had an intro song crooned by oscar winning music composer AR Rahman in Azhagiya Tamil Magan and ARR voice elevatesd the song to a higher level which goes well with actor vijay dance moment. Its second time now AR Rahman croons Intro song for Vijay59 again in upcoming project of Vijay and director Atlee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil