India
  For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஏ.ஆர். ரஹ்மான் பணத்தை எல்லாம் எதிர்பார்க்கலைங்க.. இரவின் நிழல் மேஜிக்கை சொல்லும் பார்த்திபன்!

  |

  சென்னை: பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. உலகிலேயே இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையாக ஒட்டுமொத்த படத்தையும் சிங்கிள் ஷாட்டில் எடுத்து அசத்தி இருக்கிறார் பார்த்திபன்.

  ஒத்த செருப்பு படத்தைப் போல பல விருதுகளை குவிக்க உள்ள இரவின் நிழல் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

  இந்நிலையில், சமீபத்தில் பார்த்திபன் அளித்த ஒரு பேட்டியில், எந்தவொரு காசையும் எதிர்பார்க்காமல் இப்படியொரு படத்திற்கு அத்தனை உதவிகளையும் செய்து வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான் என பார்த்திபன் பேசியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

  44 வயசாகிடுச்சி.. வயதை வெளிப்படையாக சொன்ன நடிகை.. ஓல்ட் ஈஸ் கோல்ட் மீண்டும் நடிக்க வாங்க! 44 வயசாகிடுச்சி.. வயதை வெளிப்படையாக சொன்ன நடிகை.. ஓல்ட் ஈஸ் கோல்ட் மீண்டும் நடிக்க வாங்க!

  ரஹ்மேனியா இஸ் பேக்

  ரஹ்மேனியா இஸ் பேக்

  இந்த ஆண்டு முதல் ஆறு மாத காலம் அனிருத்தின் இசையில் மூழ்கிப் போயிருந்த தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்த ஆறு மாதத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் மூழ்க உள்ளனர். வரும் ஜூலை 15ம் தேதி வெளியாகும் இரவின் நிழல் படத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களின் மூச்சை அடைக்கும் ஒரு இசையை பயன்படுத்தி உள்ளார் என இந்த பேட்டியில் பார்த்திபன் கூறியுள்ளார்.

  இது பொன்னியின் செல்வன் வாரம்

  இது பொன்னியின் செல்வன் வாரம்

  பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்புடன் இந்த வாரம் முழுக்க ஏகப்பட்ட அப்டேட்கள் காத்திருக்கின்றன என ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட் போட்டுள்ளார். ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் என பல பொன்னியின் செல்வன் பொக்கிஷங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப் போவது உறுதி ஆகி உள்ளது. மேலும், விக்ரமின் கோப்ரா மற்றும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு என ஏ.ஆர். ரஹ்மான் இசை விருந்து கொடுக்க காத்திருக்கிறார்.

  பச்சையாக பேசிய பார்த்திபன்

  பச்சையாக பேசிய பார்த்திபன்

  சமீபத்தில் கொடுத்த பேட்டியில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ஆஸ்கர் நாயகனை படத்தில் இழுத்துக் கொண்டால் என் படம் ஆஸ்கர் வெல்லும் என ரொம்பவே கேவலமாக நினைத்துத் தான் அவரை முதல் முதல் இந்த பிராஜெட்டுக்குள் அழைத்தேன் என அப்படியே வெளிப்படையாக பேசியது அவருக்கே உரித்தான பேச்சு நடை என்று தான் சொல்ல வேண்டும்.

  காசு எதிர்ப்பார்க்கல

  காசு எதிர்ப்பார்க்கல

  ஒரே ஒரு சிங்கிள் ஷாட்டில் மொத்த படத்தையும் எடுக்கப் போகிறேன்னு அவரிடம் சொன்னதும், முதலில் மனுஷன் நம்பவே இல்லை. எப்படி உங்களால் இதை சாதித்துக் காட்ட முடியும்னு திரும்ப திரும்ப கேட்டார். அதற்கு பிறகு நான் அளித்த விளக்கம், எனது நம்பிக்கையை பார்த்து அப்படியே இந்த படத்தில் என் பங்கும் இருக்க வேண்டும் என அப்படியே ஐக்கியமாகி விட்டார். காசு எதையுமே எதிர்பார்த்து அவர் வரல, நானாவது படத்தை முடிச்சிட்டு நாலு நண்பர்கள் வந்தா பேசிட்டு இருப்பேன். ஆனால், அவர் எப்போதுமே இந்த படத்தின் இசைக்காக சிந்தித்து புதிய விஷயங்களை செய்ய வேண்டும் என உழைத்திருக்கிறார் என வியந்து பாராட்டி உள்ளார்.

  ரிலீஸ் தள்ளிப் போக காரணம்

  ரிலீஸ் தள்ளிப் போக காரணம்

  இரவின் நிழல் படம் ஜூன் 24ம் தேதியே வெளியாகும் என பார்த்திபன் முன்னதாக அறிவித்து இருந்தார். ஆனால், கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் தீயாக ஓடி வந்த நிலையில், ஒரு மாதம் கழித்து ரிலீஸ் செய்து கொள்ளலாம் என நினைத்து ஜூலை 15ம் தேதி தற்போது இரவின் நிழல் படத்தை வெளியிட உள்ளார். அவரது ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை தியேட்டரில் பார்க்காமல் ஓடிடியில் பார்த்து பலரும் பாராட்டினார்கள். அப்படி இல்லாமல், இதுபோன்ற நல்ல முயற்சிகளை ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் பார்த்திபனே வாய்விட்டு கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Music Composer AR Rahman didn't expect a single penny for working Iravin Nizhal movie, he soulfully give his best work for the movie's theme, actor Parthiban revealed these things in his recent interview.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X