»   »  ஒரு கோடி ஃபாலோயர்கள்... ஆஸ்கர் தமிழனின் அடுத்த சாதனை!

ஒரு கோடி ஃபாலோயர்கள்... ஆஸ்கர் தமிழனின் அடுத்த சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்பெல்லாம் ஒரு பிரபலம் தனது கருத்தை, தான் நினைப்பதைச் சொல்ல வேண்டும் என்றால் செய்தியாளர்களை அழைத்து தகவல் சொல்ல வேண்டும்.

ஆனால் இன்று சமூக வலைத் தளங்கள் அந்த அவசியத்தை வைக்கவில்லை. நினைப்பதை நினைத்த நேரத்தில் ட்விட்டரிலோ, பேஸ்புக்கிலோ, அட வாட்ஸ் ஆப்பிலோ கூட போட்டுவிட முடியும். ஃபாலோயர்கள் மற்றும் பகிர்வுகள் மூலம் அது லட்சக்கணக்கானோரை சென்று சேர்ந்துவிடுகிறது.

AR Rahman got one cr followers in twitter

திரைத்துறைப் பிரபலங்களோ, ரசிகர்களுடன் உரையாடும் கருவியாக இவற்றை பாவிக்கின்றனர். பிரபலங்களைப் பற்றியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் முதல் செய்திகள் வரை வெளியாகும் ட்விட்டரில் இப்போதைக்கு தென்னிந்தியாவில் ஏ.ஆர்.ரஹ்மான்தான் முதலிடம் வகிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானை ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது, தென்னிந்தியாவிலேயே அதிக பாலோயர்ஸ் கொண்ட ஒரே பிரபலம் ரஹ்மான் தான். உலகளவில் ட்விட்டர் பாலோயர்ஸில் 158வது இடத்தில் இருக்கிறார்.

இதுவரை ரஜினி 27 லட்சம், தனுஷ் 23 லட்சம், சித்தார்த் 19 லட்சம், சிவகார்த்திகேயன் 14 லட்சம் பாலோயர்ஸ் கொண்டுள்ளனர். சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த கமல் ஹாஸனை 50 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர்.

English summary
A R Rahman got one cr followers in Twitter and become the first south Indian celebrity who got this much of followers.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil