twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடடா ஏ.ஆர். ரஹ்மானுக்கு மறுபடியும் ஆஸ்கர் கிடைக்கலையே

    By Siva
    |

    சென்னை: 2013ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டாவது முறையாக அந்த விருதை நழுவவிட்டுள்ளார்.

    இந்தியருக்கு ஆஸ்கர் விருது கிடைப்பது என்றாலே அது ஒரு பெரிய விஷயமாக உள்ளது. இந்திய திரையுலகினர் தங்கள் வாழ்நாளில் ஒரேயொரு ஆஸ்கர் விருதை வாங்கிவிட மாட்டோமா என்ற கனவில் உள்ளனர். இந்திய படங்களும், கலைஞர்களும் ஆஸ்கர் விருதுக்கு பல முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தான் ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக 2009ம் ஆண்டில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கினார். உலகமே அவரை ஆச்சரியத்துடன் பார்த்தது.

    இசைக்காக ஆஸ்கர் வாங்கிய முதல் இந்தியர் ரஹ்மான்

    இசைக்காக ஆஸ்கர் வாங்கிய முதல் இந்தியர் ரஹ்மான்

    சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் ஏ.ஆர். ரஹ்மான்.

    2011ல் மீண்டும் ஆஸ்கருக்கு பரிந்துரை

    2011ல் மீண்டும் ஆஸ்கருக்கு பரிந்துரை

    2011ம் ஆண்டு 127 அவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர். ரஹ்மான் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை.

    2013ல் மீண்டும் பரிந்துரை

    2013ல் மீண்டும் பரிந்துரை

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸான பீப்பிள் லைக் அஸ் என்ற படத்திற்கு இசையமைத்த ரஹ்மான் 2013ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் இந்த ஆண்டும் அவருக்கு விருது கிடைக்கவில்லை.

    English summary
    The legendary music director A.R.Rahman has once again missed the Oscar award. He was nominated for his original score in the movie 'People Like Us'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X