»   »  தமிழா தமிழா கண்கள் கலங்காதே... விடியும், விடியும் உள்ளம் மயங்காதே! - ஏ ஆர் ரஹ்மான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே... விடியும், விடியும் உள்ளம் மயங்காதே! - ஏ ஆர் ரஹ்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது வீட்டில் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருந்தார் ஏஆர் ரஹ்மான்.

திரையுலக பிரபலங்கள் பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று மவுனப் போராட்டம் நடந்தது. இதில் ரஜினி, கமல், அஜீத் என பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

AR Rahman observes one day fasting with family

இதையடுத்து, சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலையில் இருந்து மகன் அமீன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் குடும்பத்தாருடன் காலையில் இருந்து நோன்பு என்னும் உண்ணாநிலையை கடைபிடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

நோன்புக்கு இடையில் 'ரோஜா' படத்தில் இடம்பெற்ற 'தமிழா, தமிழா கண்கள் கலங்காதே - விடியும், விடியும் உள்ளம் மயங்காதே' பாடலின் சில வரிகளை தனது குரலில் பாடி ட்விட்டரில் வெளியிட்டார் ரஹ்மான்.

மாலை 6.14 மணியளவில் ஜி.வி.பிரகாஷ், மகன் அமீன் ஆகியோருடன் தண்ணீர் அருந்தி நோன்பை நிறைவு செய்த காட்சியையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

English summary
AR Rahman was observed one day fasting in support of Jallikkattu in his house with family members on yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil