»   »  7 ஆண்டுகள் கழித்து ஷார்ஜாவை தாக்கும் இசைப்புயல்

7 ஆண்டுகள் கழித்து ஷார்ஜாவை தாக்கும் இசைப்புயல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்: வரும் 13ம் தேதி ஷார்ஜாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.

உலக அளவில் புகழ் பெற்றவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். ஒரு ஆஸ்கர் விருது வாங்க மாட்டோமா என்று பல கலைஞர்கள் ஏங்கும் நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர்.

AR Rahman to perform in Sharjah after 7 years

உலக அளவில் பல விருதுகளை வாங்கிக் குவித்தாலும் தலைக்கனம் இல்லாதவர். அதனாலேயே ரஹ்மானை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் அவரின் இசை நிகழ்ச்சி வரும் 13ம் தேதி ஷார்ஜாவில் நடைபெறுகிறது.

15 ஆயிரம் பேர் அமர்ந்து கண்டுகளிக்கும் அளவுக்கு இடம் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7 ஆண்டுகள் கழித்து ரஹ்மான் ஷார்ஜாவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

ரஹ்மானின் இசையை கேட்க அமீரகம் வாழ் தமிழர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Maestro AR Rahman is going to perform in UAE after seven long years on march 13th.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil