»   »  ஏ ஆர் ரஹ்மானிடம் பெற்ற பயிற்சிதான் என்னை இசையமைப்பாளராக்கியது! - சந்தோஷ் தயாநிதி

ஏ ஆர் ரஹ்மானிடம் பெற்ற பயிற்சிதான் என்னை இசையமைப்பாளராக்கியது! - சந்தோஷ் தயாநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்து வரும் படம் ‘இனிமே இப்படித்தான்'.

இதில் சந்தானத்திற்கு ஜோடிகளாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி மற்றும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் நடித்த அகிலா கிஷோர் நடித்துள்ளனர்.

முருகானந்த் இயக்கியுள்ள இப்படத்தை சந்தானம் தனது ஹேன்ட் மேட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளராக கடல், லிங்கா படங்களில் பணியாற்றியுள்ளார்.

இனிமே இப்படித்தான் படத்திற்கு இசையமைத்தது குறித்து சந்தோஷ் தயாநிதி பேசுகையில், "இப்படம் எனக்கு முதல் படம். இந்தப் படத்தில் 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். இந்தப் பாடல்களுக்கு புதிய பாடகர்களைப் பாட வைத்துள்ளேன்.

கானா பாலா பாடியுள்ள பாடல் சிறப்பாக வந்துள்ளது. கானா வினோத் என்பவர் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

நான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ‘கடல்', ‘லிங்கா', ‘மரியான்' உள்ளிட்ட படங்களுக்கு உதவியாளராக பணியாற்றியுள்ளேன். ஏ.ஆர்.ரஹ்மானின் பட்டறையில் பணியாற்றியது இப்படத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

இப்படத்தின் நாயகன் சந்தானம் நல்ல மனிதர். நான் இப்படத்திற்காக இசையமைத்த டியூன்களை அவரிடம் போட்டு காண்பிக்கும்போது, அவர் எந்த திருத்தமும் சொல்லவில்லை. உடனே ஓகே சொல்லிவிட்டார்.

சந்தானத்திற்கு பிடித்ததுபோல் இப்படத்தின் பாடல்கள் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும். இது ஆடியன்சுக்கு சம்மர் டீரிட்டாக இருக்கும். எனக்கு இந்த படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்த சந்தானத்திற்கு நன்றி,' என்றார்.

நேற்று பிரமாண்டமாக நடந்த இதன் இசை வெளியீட்டு விழாவில் முதல் சிடியை ஆர்யா மற்றும் சிம்பு வெளியிட, உதயநிதி ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

English summary
Santosh Dayanidhi, who is making his debut as music director through Inimey Ippadithaan, shared his first movie experience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil